2012 ஆண்டு நான் பார்த்த சிறந்த 10


இந்தப் பதிவு 2012  ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது.

முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே.


10) அட்டக்கத்தி
விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர். அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இயக்கியிருக்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் க்கு நன்றிகள் பல.
9) கலகலப்பு & ஒரு கல் ஒரு கண்ணாடி
இரண்டு படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் ஒரே இடம்.
கலகலப்பு – Soul Kitchen படம் நான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் கலகலப்பு எனக்கு நன்றாவே இருந்தது. படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா – “அமிதாப் மாமா” இளவரசு தான். சந்தானத்தின் காமெடி அடுத்த பெரிய பலம். வயிறு குலுங்க சிரித்து விட்டு வந்த படம். இன்றும் விடாமல் இணையத்திலும், டிவியிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் படம். முக்கியமாக இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ். சுந்தர்.சி ரிட்டன்ஸ் (ஆனாலும் காப்பி காப்பிதான்!)
ஒரு கல் ஒரு கண்ணாடி – மீண்டும் சந்தானம். சந்தானம் மட்டும் தான். ஹன்சிகா added attraction. அடுத்து தான் உதயநிதி வருகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லையென்றாலும் ஆரம்பத்திலிர்ந்து கடைசி வரை சிரித்துவிட்டு வெளியே வந்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனர் ராஜேஷ் சந்தானம் இல்லாமல் ஒரு காமெடி படமோ அல்லது ஏதாவதொரு படமோ எடுக்கட்டும், அப்பொழுது பார்க்கலாம்.
“மிரட்டல்” படத்தையும் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதிலும் சந்தானம் இருந்தார். காமெடியும் இருந்தது.
8) மாலை பொழுதின் மயக்கத்திலே
இந்தப் படத்தை டாப் 10னில் கொண்டுவரவில்லை என்றால் என் நண்பர்கள் என்னைப் பிண்ணிவிடுவார்கள். இந்தப் படத்தை, எத்தனை முறை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றே தெரியவில்லை. முக்கியமாக ஹீரோயின் நண்பருடன் ஹீரோ பேசும் காட்சி. நடிப்பு, வசனம், இசை என்று எல்லாமே அருமையாக அமிதிருக்கும் காட்சி இது. அருமையான ஒன்-லைன், கன்வின்ஸிங்கான திரைக்கதை, புத்திசாலித்தனமான வசனங்கள், ப்ளீஸிங்கான ஒளிப்பதிவு, இனிமையான பாடல்கள் என்று இந்தப் படம் ,மொத்தமாக கொஞ்சம் “போர்” அடித்தாலும், தனித்தனியாக இவையனைத்தும் அற்புதமாக இருக்கும். பாடல்கள் அடிக்கடி வந்து நம்மைச் சோதிப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம் தான். ஆனால் ஒரு காஃபி ஷாப்பில் நடக்கும் கதையை, வெறும் 9 கதாப்பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு 2 மணிநேரத்திற்கு மேல் பாடல்கள் இல்லாமல் வேறு எப்படி நகர்த்த முடியும்? அதனால் மன்னித்துவிடலாம். இப்படிச் சொல்லக்கூடாது என்றாலும், தியேட்டருக்கு போய் பார்ப்பதை விட, ஒரு மழை பெய்யும் மாலைநேரத்தில் கையில் ஒரு சூடான காஃபியை வைத்துக்கொண்டு பார்க்க இது சரியான சினிமா. இந்தப் படத்தின் ஹீரோயின் “சுபா” இறந்த செய்தி கேட்டு நாங்கள் அடைந்த துக்கம் சொல்லில் அடங்காது. அழகு தன்னை மாய்த்துக்கொண்டது அன்று. கதாநாயகன் ஆரி கலக்கியிருக்கிறார். அருமையான expressions. சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இயக்குனர் நாராயண் நாகேந்திர ராவ். மிஷ்கினின் அசிஸ்டண்ட். இதுபோனட்ர வேறுபட்ட கதைக்களங்களில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கத் தெரிந்தால் பெரிய ஆளாக வரும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் படத்தில் இவர் எழுதிய வசனங்கள் இவரது ஒரு பலம் என்றால், கோபி அமர்நாத் தின் ஒளிப்பதிவு, அச்சு வின் இசை கூடுதல் பலம்.
பி.கு: நான் மது அருந்துவதில்லை. மது அருந்துவதை ஆதரிப்பவனும் இல்லை என்பதால் மதுபானக்கடையை இங்கு கொண்டு வர மனம் ஒத்துவரவில்லை. ஆனால் “கன்டென்ட்” படி பார்த்தால், மதுபானக்கடை படமும் இந்த இடத்தில் வர வேண்டும். அருமையான முயற்சிக்கு இயக்குனர் கமலக்கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்.
7) தடையறத் தாக்க 
சத்தியமாக இந்தப் படம் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேக்கிங்கில் என்னை அசரடித்துவிட்டது. அருண் விஜய் தன் வாழ்வில் எடுத்த பெஸ்ட் முடிவு இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாகத்தான் இருக்க முடியும். ஆங்காங்கே சில ஓட்டைகள் இருந்தாலும் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் Characterization. ஹீரோ அருண் விஜய், ஹீரோயின் மம்தா, முக்கியமாக இரண்டு வில்லன்களை வடிவமைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெல்டன் இயக்குனர் மகிழ் திருமேனி! படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் தயவு செய்து எப்படியாவது ஒரு முறை பார்க்க முயற்சி செய்யவும்.
6) நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இந்தப் படமும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ள, மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்ததாலோ என்னவோ, ஆரம்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மிகவும் ஸ்லோ வாக இருந்தது. ஆனால் செகண்ட் ஆப் – அல்ட்டிமேட் காமெடி. சிரித்து சிரித்து வயிறு புண்ணானது நிஜம் முக்கியமாக – ப்ப்பா… யார்டா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு. செம சிரிப்பு. நண்பர்கள் மூவர், விஜய் சேதிபதி – அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கன்டென்ட் வைத்துப் பார்க்கும் பொழுது இன்னும் கொஞ்சம் டிரிம் செய்யப்பட்டு வந்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. படம் தேவையை விட நீளம். மேக்கிங் கூட குறும்பட அளவிற்கு தான் இருந்தது என்றாலும் பரவாயில்லை. பெரிதாக “குறை” போல் எங்கும் தெரியவில்லை. இயக்குனர் பாலாஜி தரணீதரன் அடுத்த படத்தில் பட்டையைக் கிளப்புவார் என்று இப்பொழுதே தெரிகிறது. வாழ்த்துக்கள். படத்தில் இடம் பெறாத “ஓ கிரேசி மின்னல்” பாடல் எனது ஆல் டைம் பேவரிட்.
5) பீட்ஸா
சினிமாவிற்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. முதல் பாதி முழுக்க ஒரு கதையை சொல்லிவிட்டு, பல முடிச்சுகளை கண்டமேனிக்கு போட்டுவிட்டு இரண்டாம் பாதியில் அந்த முடிசுகளை அவிழ்ப்பதற்கான பதில்களைச் சொல்லாமல் “அப்போ நாங்க சொன்னதெல்லாம் பொய், இது தான் நிஜம்” என்று சம்பந்தமே இல்லாத வேறு ஒரு கதையை, அதுவும் கிளைமாக்ஸிற்கு கொஞ்சம் முன் சொல்வதெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருப்பவனை ஏமாற்றும் செயல். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இப்படி ஏமாற்றியதை மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். நானும் தான். லாஸ்ட் டுவிஸ்ட் எனக்கு பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. மேக்கிங், கதையைச் சொன்ன விதம், முக்கியமாக ஒளிப்பதிவு பிரமாதம். பிரமாதப் படுத்திவிட்டார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். விஜய் சேதுபதிக்கு இனி முழுக்க க்ரீன் சிக்னல் தான். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்து நடித்தால் தொடர்ந்து கவனிக்கப்படுவார். அட்டகத்தியைத் தயாரித்த அதே திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் C.V.குமார் தான் இந்த படத்தையும் தயரித்திருக்கிறார். நாளைய இயக்குனர் முதல் சீசனின் டைட்டில் வின்னர் நளன் இயக்கப் போகும் முதல் படத்தையும் நன்றிகள் பல.
4) துப்பாக்கி
என்னைக் கேட்டால் இந்த இடம் துப்பாக்கிக்கு மிகவும் அதிகம். விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க வேண்டாம். விஜய் இது போன்ற நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், அவருக்கு இருக்கும் மாஸ் ஓப்பனிங்கிற்கு வேல்யூ சேர்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும். துப்பாக்கியை நான் முழுக்க முழுக்க ஏ.ஆர்.முருகதாஸின் படமாகத்தான் பார்க்கிறேன். இவரது ஏழாம் அறிவிற்கு முந்தயை படங்களை கணக்கில் கொண்டால் துப்பாக்கி அப்படி ஒன்றும் சிறப்பான படம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை. இந்த ஆண்டு வெளியான எத்தனையோ ஏமாற்றங்களுக்கு (முக்கியமாக பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படங்கள்) மத்தியில் துப்பாக்கி எவ்வளவோ மேல். என்னை அசரடித்தது படததின் முதல் பாதி + விஜய் யின் நீட் பெர்பாமன்ஸ். இரண்டாம் பாதி OK. துப்பாக்கி பற்றிய எனது பதிவுகள் பாகம் 01பாகம் 02
3)
 
2)
 
1)
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அளவிற்கெல்லாம் இந்த வருடம் எந்தப் படமும் வரவில்லை என்பதால் அந்த இடங்களை காலியாக விட்டுவிட்டேன். அவசியம் வேண்டுமென்றால் இங்கிலீஷ் விங்கிலீஷை மூன்றாம் இடத்திலும் நான் ஈ யை இரண்டாம் இடத்திலும் வைக்கலாம். ஆனால் இந்த இரண்டு படங்களையும் படங்களை தமிழ் படங்கள் என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொறுத்த வரை முதல் மூன்று இடங்கள் இந்த வருடம் காலியாக இருக்கிறது.
இந்த 7 படங்கள் தவிர இன்னும் 10 படங்கள் இருக்கிறது. சூப்பர் என்று சொல்லமுடியவில்லை என்றாலும், என்னைக் கவர்ந்த படங்கள் இவை. அதாவது OK 10 படங்கள்.

கும்கி

மைனாவில் உயிர் இருந்தது. ஆனால் கும்கியில் அது மிஸ்ஸிங். அதனாலேயே பெஸ்ட் பத்திற்குள் வர வேண்டிய படம் ஓக்கே பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. படத்தில் எனக்குப் பிரபு சாலமனே தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் தெரிந்தார். அவரை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருப்பது போல் தெரிந்தது. தம்பி ராமையாவின் ஒரே மாதியான காமெடி, ரிபீடட் காட்சிகள், பொம்னை சட்டையே செய்யாமல் யானையை மட்டுமே ரசிக்கும் அல்லி ப்ரீ-கிளைமாக்ஸிற்கு முன் திடீரென்று பொம்மனையும் காதலிப்பதாககச் சொல்வது, வில்லன் யானை கொம்பனை இரண்டே காட்சிகளில் மட்டுமே காட்டி, கிளைமாக்ஸ் யானை சண்டையையும் இரண்டு நிமிடத்திற்குள், அதுவும் இருட்டுக்குள்ளேயே முடித்தது, முக்கியமாக மைனாவில் ஹீரோ ஹீரோயின் என்றால் இந்தப் படத்தில் அவர்கள் தவிர்த்து மற்றவர்களைக் கொன்றது என்று படத்தில் என்னைக் கவராத விஷயங்கள் நிறைய இருந்தது. யானைகளை உண்மையாக மோத விட்டு படமெடுக்கக்கூடிய சூழல் இந்தியாவில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசஷயம் தான். கிராபிக்ஸ் தான் ஒரே தீர்வு. கதையின் அடிநாதமே கொம்பனை எதிர்ப்பதுதான், அதாவது கிளைமாக்ஸ் யானைச் சண்டைதான். அதை வெளிச்சத்தில் இன்னமும் கொஞ்சம் செலவு செய்து தெளிவாகக் காட்டியிருக்கலாம். இடம் வாங்கிப் போட்டு, பயிர் வளர்த்து அறுவடை செய்தெல்லாம் படம் பிடித்தவர்கள், முக்கியமான இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது வருத்தம். கொம்பன் மீதே முழு கவனமும் இருந்தததால் பொம்மன்-அல்லி காதல், அதிலிருக்கும் பிரச்சனை என்பதெல்லாம் தெரியவே இல்லை. இம்பாக்ட்டும் இல்லை. “ஆடுகளம்” படத்தில் காட்டப்பட்ட சேவல் சண்டை கிராபிக்ஸ் தான். பொம்மைச் சண்டை போல் தான் இருந்தது. பெரும்பாலானோர் நேரிலேயே பார்த்திருக்கும் சேவல் சண்டையையே மக்கள் கிராபிக்ஸில் காட்டிய போது ஏற்றுக்கொண்டபோது, சாமானியர்கள் யாரும் பார்த்திராத யானைச் சண்டையை கிராபிக்ஸில் ரொம்ப பெர்பெக்டாக வேண்டாம், கொஞ்சம் திறம்படக் காட்டியிருந்தால்கூட நிச்சயம் ரசித்திருப்பார்கள். இருட்டில், கீழே பள்ளத்தில் தொங்குவது கொம்பனா மாணிக்கமா என்றே தெரியவில்லை. படம் அந்த இடத்தில் என்னைப் பொறுத்தவரையில் தோற்றுவிட்டது. இது இருக்கட்டும். விஷுவல், டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் தமிழுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் சினிமாவிற்கு மிகவும் பழையது. நமது பலம் கதை, திரைக்கதை. அதிலாவது நம் இயக்குனர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உலகமே கொண்டாடும் ஈரான் படங்களில் எல்லாம் என்ன டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருக்கிறது? “கதை” – இது மட்டும் தான் ஹாலிவுட்டிலிருந்து மற்ற நாட்டவரை (படங்களை) வேறுபடுத்திக் காட்டும். இதை நம்மாட்கள் புரிந்து கொள்ளவேண்டும். மற்றபடி விக்ரம் பிரபுவிற்கு அருமையான அனுபவம். லக்ஷ்மி மேனன் அழகு.
காதலில் சொதப்புவது எப்படி
நாளைய இயக்குனர் ஷோவிலிருந்து முதலில் படம் இயக்க வந்த பாலாஜி மோகனின் படம். முழுக்க முழுக்க ஹீரோவின் செல்ஃப் நரேஷன் ஸ்டைலில் படம் பிடிக்கப்பட்டிருந்தது எவ்வளவு பலமோ அதே அளவு போகப் போக பலவீனமாகவும் அமைந்தது. ஆனாலும் புதிதான டிரீட்மெண்ட், யூத்தான மேக்கிங், காட்சிகள், அப்ரோச் என்று படம் நன்றாகவே இருந்தது. இயக்குனரது குறும்படங்களில் பார்த்த காட்சிகளே மீண்டும் படத்திலும் வந்ததால், கொஞ்சம் அலுப்பும் தட்டியது. காட்சிகள் இன்னமும் புதிதாக, கொஞ்சம் ப்ரெஷாக இருந்திருந்தால் படம் இன்னமும் அருமையாக இருந்திருக்கும். ஏகப்பட்ட காதல் படங்களைப் பார்த்து விட்டோம் என்பதால் படத்தைக் கொண்டாடி பெஸ்ட் 10 இல் வைக்க முடியவில்லை.
அம்புலி 3D
இந்த வருடத்தின் மற்றுமொரு ஆச்சரியம். தமிழின் முதல் Stereoscopic 3D படம். படத்தின் முதல் 10 நிமிடக்காட்சிகள் இன்னமும் என் கண் முன் தெரிகிறது. சப்பைக் கதை, அதை விட சப்பையான கேரக்டர்கள், காஸ்டியூம்கள் (முக்கியமாக அம்புலி காஸ்டியூம்) என்றாலும் மேக்கிங் அற்புதம். வாழ்த்துக்கள் ஹரி சங்கர், ஹரிஷ் நாராயண்.
3
படத்தின் முதல் பாதியால் தப்பியது ஐஸ்வர்யா தனுஷின் “3”. இரண்டாம் பாதி முழுச் சொதப்பல், கொலைவெறி பாடலைப் விஷுவலாகப் பார்த்தவர்களுக்கெல்லாம் கொலைவெறி வந்தது. பள்ளிப் பருவத்தில் காதல் என்பதெல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகள் அதிகம். அடுத்தடுத்து வரிசையாக “பள்ளியில் காதல்” டைப் படங்கள் வருவது சரியல்ல. அதே போல் “நோய் கதைகள்”. போன பதிவிலேயே இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். ஹீரோவிற்கு கேன்சர் என்று ஆரம்பித்து, பார்ப்பவர்களைச் சாவடிப்பதை தமிழ் சினிமா நிறுத்தியே ஆக வேண்டும். கேன்சர், மஞ்சள்காமாலை, வரட்டு இருமல் என்று எதையாவது சொல்லி ஒரு டாக்டரை வைத்து “இந்த வியாதி உள்ளவங்க என்ன செய்வாங்க டாக்டர்?” “இவங்கள குணப்படுத்த வழியே இல்லையா டாக்டர்?” “நீங்க நெஜமாவே டாக்டர் தானா டாக்டர்?” என்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு டாக்டர் வாயாலேயே மொத்தக் கதையையும் விவரமாகச் சொல்லிவிட்டு சாவகாசமாக கிளைமாக்ஸை நோக்கி படத்தை நகர்த்துவது என்பது என்னைப் பொறுத்தவரையில் மோசமான, மிக மோசமான கதைசொல்லலுக்கான எடுத்துக்காட்டு. திரைப்படம் என்பது காட்களின் வாயிலாகத்தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். வெறும் பக்கம் பக்கமான வசனங்களால் அல்ல.
Bi-Polar Disorder நோயை வைத்து எடுக்கப்பட்ட, பாராட்டக்கூடிய ஒரு நல்ல முயற்சி, லக்ஷ்மி ராம்கிருஷ்ணனின் “ஆரோகணம்”.
Bi-Polar Disorder நோயுடைய கதாநாயகியைக் கொண்ட டி.வி சீரியல் “Homeland”. இந்த ஆங்கிலத் தொடர் பற்றியும், நோயை அவர்கள் காட்டிய விதம் பற்றியும் நான் எழுதிய பதிவு இது.
சுந்தரபாண்டியன்
முதல் முறை தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்த போது, எனக்கும் சரி, உடன் வந்த என் நண்பனுக்கும் சரி, படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் அடுத்து இந்தப் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது “படம் நன்றாகத்தானே இருக்கிறது” என்று தோன்றியது. முதல் தடவை படம் எங்களுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் – நாங்கள் கொடுத்த டிக்கெட் விலை – 250ரூ! 100ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் விலை இருந்திருந்தால் நாங்கள் இந்தப் படத்தைக் கொண்டாடியிருப்போம். சரி சொந்தக்கதையை விடுங்கள். சசிகுமார் இன்னும் எத்தனை நாளைக்கு “நட்பு – துரோகம்” என்கிற ஆயுதத்தையே வைத்துக் கொண்டு சினிமாவில் போராடப் போகிறார் என்று தெரியவில்லை. மதுரை பேக்ரவுண்ட், ஊருக்கே பிடிக்கும், எதுவும் படித்திருக்கவில்லையென்றாலும் எல்லாம் தெரியும் கதாநாயகன், வளைத்து வளைத்து காதலிக்கும் ஹீரோயின், முக்கியமாக “கூலாங்கல்லு பல்லுக்காரன்”பாட்டையெல்லாம் சுந்தரபாண்டியனோடு நிறுத்திக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். வேற ஏதாவது முயற்சி பண்ணுங்க சசி. லக்ஷ்மி மேனனுக்கு இதைவிட அருமையான “முதல் படம்”  கிடைக்காது. அழகு!
சாட்டை
சொல்லிய கருத்திற்காக இந்த படம் எனது OK லிஸ்டில் இடம் பெருகிறது. காட்சிகள் டிராமாத்தனமாக இருந்தாலும், சில காட்சிகள் பாராட்டும்படி இருந்தது. அரசுப்பள்ளிகளில் நடக்கும் அவலங்களில் முடிந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். சிறிய பள்ளிகளில் இன்னும் பிரச்சனைகள் அதிகம். அத்தனையையும் காட்டினால் நம் அரசிற்குத் தான் அவமானம். அரசு உத்யோகத்திற்காக காத்துக்கிடக்கும் ஆசிரியர்களைவிட, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவு. ஸ்கூலிற்குப் போகும் பெண்ணிடம் ஒரு பையன் வழிமறித்து “என்னைக் காதலிப்பியா மாட்டியா” என்று கேட்கும்படியான காட்சிகள் இனி வேண்டாம். ப்ளீஸ். இது போன்ற காட்சிகளால் தான் இன்று வழி மறிப்பதை சரி என்று புரிந்துகொள்ளும் மாணவன் நாளை தனக்குக் கிடைக்காத பெண்ணின் மேல் ஆஸ்ட் அடிப்பதும் தப்பில்லை என்று தனக்குத்தானே ஒரு நீதியை வகுத்துக்கொண்டு செயல்படுகிறான். இரண்டாம் பாதியில் அந்தப் பெண் காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்பதைப் போல் காட்டியிருப்பதெல்லாம் ம்ஹூம்ம்… சரியில்லை. இது தப்பான எடுத்துக்காட்டு. இறுதியில் அந்த ஜோடி ஒன்று சேரவில்லை என்று காட்டினாலுமே, அந்தக் காதல் டிராக் தவிர்த்து மீதிப் படம் நல்ல படமே. சாட்டை படத்தைப் பற்றிய எனது முந்தைய பதிவு இது.
 
சாருலதா
மாற்றானை விட சாருலதாவில் Conjoined Twins Concept புத்திசாலித்தனமாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. Genetics அது இதுவென்று போட்டுக் குழப்பாமல், சாதாரணமாக ஒட்டிப்பிறந்த இரட்டையர் பெண்களில் ஒருத்திக்கு காதல் வருகிறது. மற்றவளாய் பாரமாக நினைக்கிறாள். பிரிகிறார்கள். அப்படிப் பிரியும்போது ஒருவள் இறந்து விட, பிழைத்தவள் தான் தன் சாவிற்குக் காரணம் என்று இறந்தவள் நினைத்து பழிவாங்கத் தொடங்குவது தான் கதை. அருமையான ஒரு டுவிஸ்ட் படத்தில் உண்டு. ஆனால் அதை காட்சியப்படுத்திய விதம் வொர்ஸ்ட். பிரியாமணி தேசிய விருது நடிகை. அல்வா சாப்பிடுவது போல் சும்மா அசால்ட்டாக நடித்து விட்டுப் போயிருக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு என்று மும்மொழிகளில் இந்தப் படம் வெளியானது. தமிழ், தெலுங்கில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் கன்னடத்தில் சூப்பர் ஹிட்!
நான்
Identity Theft Concept வைத்து ஒரு புதிய முயற்சியைக் கொடுத்திருந்தார்கள். அடெம்ப்ட் ஒக்கே. ஆனால் படம் சுமார் தான். விஜய் ஆண்டனி சும்மாவே நின்று கொண்டிருந்ததைப் போலத் தெரிந்தது. இசையமைப்பதை மட்டும் தான் அவர் செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நடிப்பது என்று முடிவு செய்தால் இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்து, பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம்.
நண்பன்
படம் முழுக்க எனக்கு 3 IDIOTS மட்டுமே தெரிந்தது. விஜய் யோ, ஷங்கரோ தெரியவேயில்லை. 3 IDIOTS எனக்குப் பிடித்த படம் என்பதால் இந்த இடம். 3 IDIOTS 35 கோடியில் தயாரிக்கப்பட்ட படமாம். ஆனால் நண்பனின் பட்ஜெட் 60 கோடி. சிறப்பு!
நீதானே என் பொன்வசந்தம் & மாற்றான்
இந்த இரண்டு படங்களுமே விமர்சனங்கள் சொல்லும் அளவிற்கு மோசமில்லை என்றே சொல்வேன். கௌதம் மேனன் – கே.வி.ஆனந்த். இருவருமே தங்களது ரசிகர்களை ஏமாற்றியது என்னவோ உண்மை தான். ஆனால் இருவர் மீதும் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. இருவரது அடுத்த படங்களையும் நான் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
OK லிஸ்ட் முடிந்தது!
இறுதியாக இரண்டு படங்களைப் பற்றி நான் சொல்லவேண்டும்.
வழக்கு எண் 18/9

இந்தப் படத்தை எந்த லிஸ்டிலும் என்னால் கொண்டு வரமுடியவில்லை. பெஸ்ட், ஓக்கே, வொர்ஸ்ட் என்று எதிலும் அடங்காத ஒரு படம் வழக்கு எண்.  தமிழின் ரியலிஸ சினிமா. முகத்தில் அறையும் உணமியைச் சொன்ன படம். தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய படம். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சோகம், கண்ணீர், வேதனை, இழப்பு, துரோகம் எல்லாம் சொந்த வாழ்க்கையிலேயே நிறைய இருக்கிறது. அதையே தியேட்டரிலும் போய் பார்ப்பது, எனக்குப் பிடிக்காது. எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தியேட்டருக்கு போய் படம் பார்ப்பது. அங்கும் தினம் தினம் நான் பார்க்கும், வாழும் இயல்பு வாழ்க்கையையே பார்க்க நான் விரும்புவதில்லை. நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கும் கேட்கும் சம்பவங்களின் கோர்வை தான் வழக்கு எண். அதற்காக நம் எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கும் என்று சொல்லவரவில்லை. இது நல்ல படம் இல்லை என்றும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், இந்த மாதிரி படங்கள் தமிழில் இப்போதிருக்கும் சூழலில் நிச்சயம் (அவ்வபோது) வர வேண்டும், நானும், அனைவரும் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டும். முக்கியமாக வெற்றியடையச் செய்ய வேண்டும். எதையெதையோ தின்கிறோம், அப்படியே கசக்கும் என்று தெரிந்தும், நம்மை குணப்படுத்தும் என்ற ஒரே காரணத்திற்காக மாத்திரையையும் விழுங்கிவிடுவதில்லையா, அதுபோல. நமக்கு வராது என்ற நம்பிக்கை இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதில்லையா அது போலத் தான் இந்தப் படமும் நமக்கு!

நீர்ப்பறவை

வழக்கு எண் படம் பற்றிய எனது கருத்தைத் தான் இந்தப் படத்திற்கும் சொல்வேன். சிறு வித்தியாசம். இந்தப் படம் உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது. கடலும் கடல் சார்ந்த பகுதியையும் அருமையாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன். விஷ்ணு பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் சுனைனா கலக்கியிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. “மகனை கண்மூடித்தனமாக நேசிக்கும் தாய்” என்கிற கதாப்பாத்திரத்தில் இவர் இன்னும் எத்தனை படங்கள் நடித்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம். நந்திதா தாஸ் உட்பட படத்தில் நிறைய நட்சத்திரக் கூட்டம். அவர்கள் எல்லாம் எதற்கு என்று புரியவில்லை. மீனவர் வாழ்க்கை, குடியின் தீமை போன்றவற்றை அழகாகச் சொல்லிய இயக்குனர் சீனு ராமசாமி, மீனவர்களின் முக்கியமான பிரச்சனையை மட்டும் மற்ற எல்லோரையும் போல பட்டும் படாமல் தான் சொல்லியிருக்கிறார். படத்தில் சமுத்திரக்கனி (அருமையான நடிப்பு) மட்டும் தான் இது தொடர்பாக பேசுகிறார். அதுவும் மூன்றே காட்சிகள் மட்டும் தான். எதையும் முழுதாக, தெளிவாகச் சொல்ல்வில்லை. விருது வாங்க வேண்டும் என்கிற நினைப்பு மட்டும் தான் இயக்குனர் மனதில் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இவரும் பேட்டிகளில் “விருது” பற்றி மட்டும் தான் பேசுகிறார். பேசுகிறாரே தவிர படத்தில் விருது கொடுக்கும்படியான காட்சிகள் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார். படம் இன்னமும் கொஞ்சம் “ரா”வாக இருந்திருக்க வேண்டும். காட்சிகளில் தமிழரின் கோபம் தெரிந்திருக்க வேண்டும். தயரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்பது தான் பிரச்சனை என்றால் வேறு தயாரிப்பாளரைத் தேடிப் போயிருக்கலாம். அல்லது சொந்தக் காசைப் போட்டே படம் எடுத்திருக்கலாம். தேசிய விருது இயக்குனர் எனபதால் நிச்சயம் இவருக்கு குறைந்த பட்ச ஓப்பனிங்காவது இருந்திருக்கும். சேஃப்டியும் முக்கியம், பணமும் முக்கியம், விருதும் வேண்டுமென்றால் எப்படி? சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக, தெளிவாக இன்னமும் கொஞ்சம் குத்தலாக சொல்லியிருக்கலாமே? “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால்” படங்களை எப்படி இலங்கை பிரச்சனையைச் சொல்லும் படம் என்று சொல்ல முடியாதோ அது போலத்தான் என்னைப் பொறுத்த வரை நீர்ப்பறவையையும் மீனவர் பிரச்சனையை சொல்லும் படமாக ஏற்றுக்கொள்ள முடியாது. குடியின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கடலோர இளைஞன், திருந்தி தன் வாழ்க்கையைத் தொடங்கும் போது குண்டடிபட்டு சாகிறான் என்பதை மட்டும் தான் இந்த படம் நமக்குச் சொல்கிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் இந்தப் படத்தை TOP10 இல் வைத்துக் கொண்டாடவும் முடியவில்லை. OK 10 இல பத்தோடு பதினொன்றாக வைக்கவும் மனம் வரவில்லை!

கழுகு, கிருஷ்ணவேணிப் பஞ்சாலை, ஆச்சரியங்கள், பெருமான், தோனி, அம்மாவின் கைப்பேசி என்று இன்னமும் பல படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவற்றில் சில படங்கள் வேண்டுமென்றே பார்க்கவில்லை. சில படங்கள் விருப்பம் இருந்தும் பார்க்க முடியவில்லை.

இந்த ஆண்டு நிலைமையை கணக்கில் கொண்டு தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு பல நல்ல  படங்கள் வெளியாகும் என்று நம்புவோம்.

அப்படியே 2012 ஆம் ஆண்டின் “சிறந்த” லிஸ்டையும் கொடுத்து நிறைவு செய்துவிடுகிறேன்.

சிறந்த இசை – D. இமான் (கும்கி)
சிறந்த பின்னனி இசை – அச்சு (மாலை பொழுதின் மயக்கத்திலே)
சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (துப்பாக்கி, முகமூடி)
சிறந்த பின்னணிப் பாடகர் – D. இமான் (ஒன்னும் புரியல-கும்கி), “கானா” பாலா 🙂
சிறந்த பின்னணிப் பாடகி – மஹாலட்சுமி அய்யர் (கால் முளைத்த பூவே-மாற்றான்)
சிறந்த ஒளிப்பதிவு – சுகுமார் (கும்கி), கோபி அமர்நாத் (மா.பொ.ம, பீட்ஸா), நீர்ப்பறவை (பாலசுப்ரமணியன்)
சிறந்த படத்தொகுப்பு – மதுபானக்கடை (யார் என்று தெரியவில்லை)
சிறந்த ஸ்டண்ட்ஸ் – அனல் அரசு (தடையறத்தாக்க), Tony Leung Siu Hung (முகமூடி)
சிறந்த கலை இயக்குனர் – விஜய் முருகன் (அரவான்)
சிறந்த உடையலங்காரம் – நளினி ஸ்ரீராம் (நீ.தா.என்.பொ.வ)
சிறந்த காமெடியன் – சந்தானம் (OK OK, கலகலப்பு)
சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (Ok Ok, நீர்ப்பறவை)
சிறந்த துணை நடிகர் – முத்துராமன் (வழக்கு எண் 18/9)
சிறந்த புதுமுக நடிகர் – விக்ரம் பிரபு (கும்கி)
சிறந்த புதுமுக நடிகை – லக்ஷ்மி மேனன் (சுந்தரபாண்டியன், கும்கி)
சிறந்த நடிகர் – விஜய் (துப்பாக்கி), விஜய் சேதுபதி (பீட்ஸா)
சிறந்த நடிகை – ஸ்ருதிஹாசன் (3), சமந்தா (நீ.தா.எ.பொ.வ)
சிறந்த வசனம் – நாராயண் நாகேந்திர ராவ் (மாலை பொழுதின் மயக்கத்திலே)
சிறந்த கதை – நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
சிறந்த திரைக்கதை – கார்த்திக் சுப்புராஜ் (பீட்ஸா), ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி முதல் பாதி மட்டும்)

சிறந்த இயக்குனர் – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)

சிறந்த நடனம், சிறந்த வில்லன், சிறந்த படம் என்று இந்த வருடம் எதுவும் இல்லை.

Advertisements
By jeyanethiyakaljanijewellery

என் தமிழ் சினிமா அன்று – 01 – உலக/இந்திய/தமிழ் சினிமா வரலாறு, ஒரு பார்வை


தலைப்பைக் கண்டு குழம்ப வேண்டாம். சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். என் தமிழ் சினிமா இன்று தொடரின் ஒரு கிளைத்தொடர் தான் இந்த என் தமிழ் சினிமா அன்று! இன்றைய தமிழ் சினிமா பற்றி எழுத சில தகவல்களைத் தேடப்போய் பல தகவல்கள் காணக்கிடைத்தன. So, யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🙂
இன்றைய தமிழ் சினிமாவின் நிலையை விரிவாககப் பார்ப்பதற்கு மத்தியில் தமிழ் சினிமாவின் வரலாற்றை கொஞ்சமாகப் பார்த்து விடலாம் என்பதே இந்தப் பதிவின் நோக்கம், ஏற்கனவே பல பதிவர்கள் தங்களது பதிவுகளில் தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். எனது இந்தப் பதிவு அவற்றின் சற்று விரிவான “தொகுப்பு” என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் வலையுலகில் நான் தேடிப்படித்த பல கட்டுரைகளின் உதவியுடன் இன்னும் சில விஷயங்களையும் இணைத்து இங்கு கொடுத்துள்ளேன். ஆகவே பதிவு வழக்கதைவிட மிகவும் பெரிதாக வந்துள்ளது. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். எனது இந்தப் பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் பாதுகாக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நப்பாசை, பேராசை எல்லாம்! ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம் நண்பர்களே 🙂
டிஸ்கி: பதிவைப் படிக்கும் நண்பர்கள், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களில் ஏதாவது தவறு இருப்பதைக் கண்டால், உடனே தெரியப்படுத்தவும். சரியான தகவல்கள், உறுதிசெய்யப்பட்டபின் உடனுக்குடன் update செய்யப்படும்.
வரலாற்றை எழுதவது என்று முடிவாகிவிட்டது. ஏன் தமிழ் சினிமாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? உலகின் முதல் சினிமாவிலிருந்தே ஆரம்பித்து விடலாம்வ்.. எனவே ஆதியிலிருந்தே சொல்கிறேன். மேடை நாடகங்களே புகழ் பெற்று விளங்கிய காலகட்டத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்ட நகரும் படம் எது தெரியுமா? மேலே நீங்கள் பார்க்கும் இந்தப் குதிரைப் படம் தான் உலகின் முதல் நகரும் படம். எடுக்கப்பட்ட ஆண்டு கி.பி.1878. குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா? என்ற கேள்வி மேலோங்க கலிபோர்னியாவின் அன்றைய கவர்னர் Leland Stanford, புகழ் பெற்ற புகைப்படக்கலைஞரான Eadweard Muybridge என்பவரிடம் அந்தக் கேள்விக்கான விடையறியும் பொறுப்பை ஒப்படைத்தார்.
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கேமராக்களில், ஓடும் குதிரையை புகைப்படமாக எடுத்த Muybridge, அவற்றை தான் கண்டுபிடித்த Zoopraxiscope என்னும் இயந்திரத்தின் மூலம் இணைத்து நகரும் படமாக மாற்றியுள்ளார். 1872 ஆம் ஆண்டிலேயே வேலை ஆரம்பித்து விட்டாலும், 1878 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் நாள் தான் Muybridge ஓடும் குதுரையைத் திரைப்படமாகக் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் காட்டியுள்ளார். ஆக, அதிகாரப்பூர்வமாக உலகின் முதல் நகரும் படம் (Motion Picture) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 133 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது! இது போல் இன்னும் பல பரிசோதனைகளை இவர் செய்து பார்த்திருக்கிறார். குதிரை ஓடும்போது எத்தனை கால்கள் அந்தரத்தில் இருக்கிறது என்பதை நீங்களே இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். என்வே இந்த Muybridge தான் உலகின் முதல் “இயக்குனர்” என்று தெரிகிறது.
Muybridgeற்கு அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் ‘ஓட’க் கூடிய படத்தை எடுத்தவர் ‘Father of Cinematography’ என்றழைக்கப்படும் Louis Le Prince. முதல் பேப்பர் பிலிம் பயன்படுத்தியவரும் இவரே. Single Lens camera மற்றும் Eastman பேப்பர் மூலம் இவர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த Roundhay Garden Scene தான் உலகின் முதல் குறும்படம்
அந்தக் குறும்படம்தான் மேலே நீங்கள் பார்ப்பது. இவரே வடிவமைத்துப் பயன்படுத்திய கேமராக்களை இன்றும் இங்கிலாந்தில் உள்ள National Media Museum வில் பாதுகாத்து வைதிருக்கின்றனர். ஆனால் 1890ஆம் ஆண்டு ஒரு ரயிலில் ஏறிய Louis Le Prince பின் இறங்கவே இல்லையாம். அதாவது காணாமல் போய்விட்டார்! இவர் காணாமல் போனதாலேயே முதல் கேமராவை, நகரும் படத்தைக் கண்டுபிடித்த பெருமை அடுத்து வந்த எடிசனுக்குப் போய் விட்டது என்கிறது வரலாறு.
உலகின் முதல் அதிகாரப்பூர்வ (Patented) கேமராவைக் கண்டுபிடித்தவர் நமது எடிசன். அதன் பெயர் Kinetograph. இதை மட்டுமா கண்டுபிடித்தார், இன்னும் பலப்பல பொருட்களை கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறார் இந்த மனிதர்.
எடிசனது ஆரம்பகால குறும்படங்கள் மேலே உங்களுக்காக. ஆண்டு 1889!
அதன் பிறகு Lumière சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட Auguste and Louis Lumière வந்தனர். இவர்களது முதல் நகரும் படம் வெளியான ஆண்டு 1895. 17 அடி நீளமான பிலிமில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள்! Lumière தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள். இந்த சகோதரர்கள் தான் உலகம் அறிந்த ஆரம்ப கால சினிமா இயக்குனர்கள். ‘Lumière’ என்றால் ‘வெளிச்சம்’ என்று பொருள். உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895. இவர்கள் கண்டுபிடித்த cinematograph என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie des usines Lumière à Lyon அல்லது ஆங்கிலத்தில் ‘Workers Leaving the Lumiere Factory
இவர்களது ஆரம்பகால படங்கள் அனைத்தையும் மேலுள்ள YouTube வீடியோவில் பார்க்கலாம்.
அந்த கால இயக்குனர்களில் தவறவிடக்கூடாதவர், Georges Méliès. இவரைப் பற்றிய படம் தான் Martin Scorsese எடுத்த படம் தான் HUGO! கருப்பு வெள்ளை பிலிம்களை கைகளாலேயே கலரடித்து, உலகின் முதல் கலர் படம் காட்டியவரும் இவரே!
உலகின் முதல் sci-fi இயக்குனரும் இவரே. இவரது ‘A Trip to the Moon (1902)’ படம் உங்களுக்காக மேலே.
இனி இந்திய சினிமா வரலாறு
Lumière சகோதரர்கள் லண்டனில் படம் எடுக்க ஆரம்பித்து போதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தனர். ஆக இந்தியாவில் முதல் திரைப்படம் காட்டப்பட்ட ஆண்டு 1895. இடம் அன்றைய மும்பை. இந்தியாவின் முதல் குறும்படத்தை இயக்கியவர், Hiralal Sen, ஆண்டு 1898. அந்தப் படத்தின் பெயர் A Dancing Sceneஇந்தியாவின் முதல் விளம்பரப் படத்தை எடுத்தவரும் இவரே. 1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தை முன்னிட்டே பலப் படங்களை எடுத்து வந்த இவரது படச்சுருள்கள் அனைத்தும் இவர் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்னே எரிந்து போய்விட்டதாகத் தெரிகிறது. மற்றுமொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இவர் தனது முதல் படத்தை ஒரு ஆங்கிலேயே துரையிடமிருந்து இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே எடுத்துள்ளார்!
இந்தியாவில் வெளியான முதல் இந்தியப் படம் “Shree pundalik” வெளியான ஆண்டு 1912. இயக்கியவர் “இந்திய சினிமாவின் தந்தை” Dadasaheb Torne. இவர் தான் இந்தியாவின் முதல் படத்தை எடுத்தவர். ஆனால் இவரது பெயர் வெளிவராமல், இவருக்கு அடுத்து படம் எடுத்த Dadasaheb Phalke வின் பெயர் இன்றும் பிரபலமாக இருக்கிறது. சர்ச்சைக்குறிய அந்த Shree pundalik படத்தின் போஸ்டர் மேலே படத்தில்.
இந்தியாவின் இரண்டாவது மெளனப்படத்தை எடுத்தவர் Dadasaheb Phalke. அந்தப் படம் Raja Harishchandra. படம் வெளியான ஆண்டு (1913). இவர் தனது முதல் படத்தை எடுத்த விதத்தைப் பற்றி 2009 ஆம் ஆண்டு “Harishchandrachi Factory” என்னும் மாராத்தி படம் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்க்க வேண்டிய இந்தப் படத்தின் எனது விமர்சனம் இங்கே.  படம் முழுவதுமாக ஆங்கில சப்-டைடில்களுடன் YouTubeலேயே காணக்கிடைக்கிறது. இன்று இந்திய சினிமாவின் உயரிய விருதான வாழ்நாள் சாதையாளர் விருது இவரது பெயரில் தான் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த விருதை வென்றவர் நம் இயக்குனர் சிகரம், கே.பாலச்சந்தர். இதற்கு முன் இந்த விருதை வென்ற தமிழர், சிவாஜி கணேசன், ஆண்டு 1996.
Dadasaheb Phalke எடுத்த Raja Harishchandra படத்தில் தற்போது மிச்சமிருக்கும் பகுதிகள்தான் நீங்கள் மேலே பார்க்கும் வீடியோ!
இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் Jamshedji Framji Madan. ஆண்டிற்கு 10 படங்கள் தயாரித்து வெளியிட்டார் என்று தெரிகிறது.
இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் Alam Ara, இயக்கியவர் Ardeshir Irani. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவின் மற்றுமொரு முக்கிய நபர், தெலுங்கு சினிமாவின் தந்தை, Raghupathi Venkaiah Naidu. தென்னிர்ந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக திரையரங்கு கட்டியவர் இவர் தான், இவரது நினைவாக தெலுங்கு சினிமாவின் உயரிய விருதான் நந்தி விருதுகளில் ஒரு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். ஆனால் இந்தப் படம் நம்மிடம் இப்போது இல்லை. கவனிக்கவும், உலகின் முதல் படமான “The Horse in Motion” இன்றும் எங்கும் காணக்கிடைக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவின் முதல் படம் இப்போது நம்மிடம் இல்லை. இந்த படம் மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆரம்பகாலப் படங்களின் ஒரு பிரதி கூட இப்போது நம்மிடம் இல்லை.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு முக்கிய நபர், திரு. சுவாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி ரயில்வேஸில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், ப்ரொஜெக்டர்களையும், மொளனப்படங்களையும் வாடகைக்கு எடுத்து, ஊர் ஊராகச் சென்று கொட்டகையில் படம் காட்டியிருக்கிறார்.
முதல் பேசும் படம் தமிழகத்திற்கு வந்த ஆண்டு 1931. படம் காளிதாஸ். இயக்கியவர் H.M.ரெட்டி.. அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி மேள தாளத்துடன் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து லிபர்ட்டி தியெட்டருக்கு இந்தப் படம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் காளிதாஸ் முழுக்க முழுக்க தமிழ் படம் கிடையாதாம். படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகள் முக்கியமாக தெலுங்கில் அதிகம் பேசியதாகத் தெரிகிறது. காரணம் காளிதாஸ் வெளியாவதற்கு 45 நாட்களுக்கு முன்னரே தெலுங்கில் முதல் பேசும் படம் வெளியாகியிருக்கிறது அதாவது செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி. அந்தப் படம், ‘பக்த பிரகலாதா’. இதை இயக்கியவரும் அதே H.M.ரெட்டி தான். தயாரிப்பாளரும் இவரே. ஆக தென்னிந்தியாவின் முதல் பேசும் படம், பக்த பிரகலாதா! இந்த பக்த பிரகலாதா, காளிதாஸின் பிரதிகளும் நம்மிடம் இன்று இல்லை. ஆனால் Georges Méliès 1902 ஆம் ஆண்டு இயக்கிய ‘A Trip to the Moon’ முழுபடமும் YouTubeலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முழுக்க முழுக்க தமிழ் பேசிய (actually பாடிய) திரைப்படம் 1933 ஆம் ஆண்டு வெளியான கலவா. அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி.
S.ராஜம் ராமனாக நடித்த சீதா கல்யாணம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு திரைப்படம் ஏனென்றால் சீதையாக நடித்தவர் இவரது தங்கை S. ஜெயலக்ஷ்மி, அன்று கலை தான் முக்கியமாக இருந்தது. இன்று? இந்தப் படத்தை இயக்கியவர்Baburao Phendarkar. 1930களில் பெரும்பாலும் சுதந்திர போராட்ட்த்தை முன்வைத்தே பல படங்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் M.K..தியாகராஜ பாகவதரின் முதல் படமான பவளக்கொடி வெளியான ஆண்டு 1934. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் S.D.சுப்புலட்சுமி. மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் இந்தப் படத்தை இயக்கியவர், K. சுப்ரமணியம்.
1934 ஆம் ஆண்டுவரை தமிழ் படங்களை கல்கத்தாவிலோ, மும்பையிலோ தான் தயாரித்துள்ளார்கள். அதன்படி முதன்முதலில் தமிழகத்தில் தயாரான படம் ஸ்ரீநிவாசகல்யாணம்.
குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய படம் 1935ஆம் ஆண்டு வெளியான நந்தனார். இந்தப் படத்திற்கு தான் நம் அவ்வைப் பாட்டி, K.B.சுந்தராம்பாள். தனது குரு சத்யமூர்த்தி இந்தப் படத்தில் கதாநாயகன் வேடத்தில் இவரை நடிக்கக் கேட்டதற்கு நேரடியாகத் மறுக்க முடியாமல் ஒரு லட்சம் சம்பளமாகக் கேட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ஓக்.கே சொல்ல தமிழ் நாடே மிரண்டு போயிருக்கிறது. ஏனென்றால் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் பட்ஜெட் ரூ.30,000. ஆண்டு 1931. நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்த நந்தானாரில் கதாநாயகன் சம்பளம் ஒரு லட்சம்! இந்தப் படத்தின் இயக்குனர் Manik Lal Tandon. இந்தப் படம் அப்பொழுதே நான்கு மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது.
ஒரே காட்சியில் இருவர் தோன்றும் (இரட்டை வேடம்) முதல் படம் துருவா வெளியான ஆண்டு 1935.ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் ஒருவரே தோன்றியது இந்தப் படத்தில் தான்.
1936 ஆம் ஆண்டு ஆங்கிலேயரான Ellis R. Duncan தமிழ் படங்களை வரிசையாக இயக்கத் தொடங்கினார். இதை விட மிக்கியமாக விஷயம், அதே 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி எம்.ஜி,ஆரையும், T.S.பாலைய்யாவையும் தமிழ் சினிமாவிற்கு தந்தது. கலைவானர் N.S.கிருஷ்ணனின் இரண்டாம் படமும் இதுவே (முதல் படம் மேனகா, ஆண்டு 1935. தமிழின் முதல் சமூகப்படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு). தமிழ் சினிமாவின் முதல் காமெடியன் இவர் தான். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் சினிமாவில் காலடியெடுத்து வைத்த ஆண்டும் இதே ஆண்டு தான்.
இதே 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றுமொரு முக்கிய சம்பவம், தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்..கமலா வெளியானதும் இதே ஆண்டு தான்.
1944ஆம் வருடம் தான் தமிழ் சினிமாவின் முதல் ஹிட் வருடம். 1944 தீபாவளிக்கு வெளியான M.K..தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடியிருக்கிறது. இதுநாள்வரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படமும் இதுதான். இந்தப் படத்தின் இயக்குனர் Sundar Rao Nadkarni.
M.K.Tயின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடல் மேலே உங்களுக்காக… கூடவே தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி T.R.ராஜகுமாரியின் நடனமும்!
சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான படங்களில் முழு முக்கியத்துவம் பெருவது 1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா. இதன் பட்ஜெட் ரூ.30 லட்சம். இயக்கியவர், S.S.வாசன். இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றியும் பெற்ற முதல் படமும் இதுவே.
அந்த புகழ் பெற்ற முரசு பாடல் மேலே உங்களுக்காக…
1930களிலேயே பேசும் படங்கள் வந்திருந்தாலும் 1945 – 1950களில் தான் பாடல் விடுத்து, வசனத்தில் கவனம் காட்டத் தொடங்கியிருந்தனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.  N,S.கிருஷ்ணன் – மருதம் நடித்த நல்லதம்பி 1949ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் சிறப்பு, இதன் வசனகர்த்தா, திரு.அண்ணாதுரை. அதே போல் 1950ல் எம்.ஜிஆர் – பத்மினி நடிப்பில் மந்திரி குமாரி படம் வெளியானது. வசனம், கலைஞர் கருணாநிதி. இயக்கம் R.குருஷ்ணன், S.பஞ்சு. வாராய் நீ வாராய் பாடல் உங்களுக்காக…
அதே போல் 1952 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளிவந்த மற்றுமொரு வெற்றிப் படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் சினிமா பெற்றெடுத்த படம், பராசக்தி.
அந்த நீதிமன்ற காட்சி உங்களுக்காக.
சாதாரணமாக ஒரு படத்தில் 10 பாடல்களுக்கு குறைவில்லாமல் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம், சிவாஜி நடிப்பில் வெளிவந்த அந்த நாள். வருடம் 1954. இயக்கம் திரு.சுந்தரம் பாலச்சந்தர்.
தென்னிந்தியாவின் முதல் முளு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியான ஆண்டு 1956. இந்தப் படத்தை இயக்கியவர் Modern Theatres T.R.சுந்தரம். ஆயினும் தமிழ் சினிமா கருப்பு – வெள்ளையிலிருந்து கலருக்கு முற்றிலுமாக மாற இருபது ஆண்டுகள் ஆனதாகத் தெரிகிறது.
ஒரே படத்தில் ஒரே நடிகர் அதிகபட்சமாக 9 வேடங்களில் நடித்து வெளிவந்த படம் சிவாஜியின் நவராத்திரி. ஆண்டு 1964, இயக்கியவர் திரு.  A.P. நாகராஜன். தி பேமஸ் இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் உங்களுக்காக!
இது போல் இன்னும் “முதன்முதலாக” என்று ஆரம்பிக்கும் சங்கதிகள் பல இருக்கின்றன. இந்த இடத்திற்கு(1964) பிறகு வந்த படங்களின் தகவல்களையெல்லாம் மொத்தமாக ஒரு பட்டியலாக இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இதையும் சொல்லிவிடுகிறேன். நான் இங்கு கொடுத்திருக்கும் தகவல்கள் வெறும் விக்கிபீடியா மொழிபெயர்ப்பு அல்ல. பல இணைய பக்கங்களிலிருந்தும், தமிழ் சினிமா தளங்களிலிருந்தும், திரு.பிலிம்.நியூஸ் ஆனந்தன் அவர்களது குறிப்புகளிலிருந்தும் எடுத்து நிஜமாகவே கொஞ்சம் சிரமப்பட்டு, பல மணிநேரங்களை செலவுசெய்துதான் எழுதியிருக்கிறேன். UTV தனஞ்செயன் அவர்களது ‘Best of Tamil Cinema’ புத்தகம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதுவும் இருந்திருந்தால் இன்னும் பலப்பல சங்கதிகளை புகைப்படத்துடன் கொடுத்திருப்பேன். புத்தகம் என்று கிடைக்கிறது பார்க்கலாம். இன்னும் நிறைய தகவல்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது. அவசியம் ஏற்பட்டால் அவற்றையும் எழுதி இந்தப் பதிவை முழுமையாக்க முயசிக்கிறேன், உங்கள் ஆதரவோடு!
மேலும் ஒரு சின்ன தகவல். பழைய படங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தருவதில் “தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்” Facebook பக்கம் முதல் இடத்தில் உள்ளது. அவசியம் இவர்கள் பக்கத்தை ஒரு அலசு அலசவும். ஆச்சரியம் நிச்சயம்!
முடிச்சாச்சு!
நான் இதுவரை எழுதியிருக்கும் 145 பதிவுகளில் இந்தப் பதிவை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். காரணம், நான் ரசிக்கும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நானே தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஆசை ஆசையாக எழுதியிருப்பதால் தான். என் பாட்டன், முப்பாட்டன் வரலாற்றை தேடிக் கண்டுபிடித்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைதிருப்பேனா என்பது சந்தேகம் தான். இந்தப் பதிவு பயனுள்ளதாகத் தெரிந்தால் உங்கள் வலைப்பக்கங்களில் இதைப் பகிரவும். என்ன பெருசா எழுதிட்ட என்று கேட்காதீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் கொஞ்சம் பெருசாதான் எழுதியிருக்கேன் 🙂
இந்தப் பதிவு, நான் நேசிக்கும் என் தமிழ் சினிமாவிற்கு சமர்பணம்!
தொடரும்…
By jeyanethiyakaljanijewellery

நகைத் தொழிலாளர்கள் சிரிப்பது எப்போது?


நகைத் தொழிலாளர்கள் சிரிப்பது எப்போது?

நம் நாட்டு மக்கள் தங்க நகைகள் அணிவதில் மிகுந்த விருப்பமுடையவர்கள். காதில் தங்க நகை அணிவதற்காகக் காதணி விழா என்னும் விழாவையே நடத்துகிறோம். மேலும் பூப்பு நன்னீராட்டு, திருமணம், வளைகாப்பு என ஒவ்வொரு விழாவிலும் தங்க நகைகளே சிறப்பிடம் பெறுகின்றன.

சுரங்கங்களிலிருந்து தாதுவாக வெட்டியெடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப் பட்டு வரும் தங்கக் கட்டிகள் தங்க நகைகளாக உருமாற்றம் பெற, தங்க நகைத் தொழில் செய்யும் கைவினைக் கலைஞர்களால் பல்வேறு வேலைகள் செய்யப் படுகின்றன.

கட்டித் தங்கத்தை நகைகளாக மாற்றும் தங்க நகைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தங்கம் நகையாக உருமாறும் தொழில் பற்றியும், தங்க நகைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றியும் ஓம் சக்தி வாசகர்களுக்குத் தெரியப்படுத்த தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திரு. சி. ரங்கராஜன் அவர்களை அணுகினோம். அவர் அளித்த

கேள்வி: தமிழ்நாட்டில் தங்க நகைத் தொழில் எங்கெங்கு சிறப்பாக நடைபெறுகிறது?

பதில் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்க நகைத் தொழிலில் முதலிடம் வகிப்பது கோவை மாநகரம்தான். இந்தியாவில் மும்பை முதலிடத்திலும், கோவை இரண்டாமிடத்திலும் உள்ளன. அதற்கடுத்து சென்னை, திருச்சி, சேலம், மதுரை, நகரங்களில் இத்தொழில் நடைபெறுகிறது. நகை விற்பனையில் சென்னை மாநகரம் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது.

கேள்வி : இத்தொழிலில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளனர்?

பதில் : கோவையைப் பொறுத்தவரை இத்தொழிலில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் அதாவது சுமார் 40 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில அளவில் சுமார் 1 லட்சம் பேர் இத்தொழில் செய்கிறார்கள்.

கேள்வி : தங்கம் இறக்குமதி எப்படிச் செய்யப்படுகிறது?

பதில் : அரசாங்கம்தான் செய்கிறது. அரசாங்கம் மட்டுமின்றி மும்பையிலுள்ள புல்லியன் வியாபாரிகள் சங்கம் என்ற அமைப்பும் இறக்குமதி செய்கிறது. இவர்கள் தங்கத்தைக் கட்டிகளாக வாங்கி விற்பனை செய்கிறார்கள். நகைகளாகச் செய்வதில்லை. இப்போது வங்கிகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

கேள்வி : தங்க நகைகள் இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா?

பதில் : வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து நகைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வெளி மாநிலங்கள் என்று பார்த்தால் முதலிடம் வகிப்பது மும்பை மாநகரம்தான். வெளிநாடுகள் ஏற்றுமதிக்கு அதற்கென உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாகப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

கேள்வி : ஒரு நகையை ஒரே இடத்தில் ஒருவரே செய்து விடுகிறாரா?

பதில் : ஒரே இடத்தில் செய்யப்படுவதில்லை. முதலில் தேவையான வடிவங்களாக டையிங் இயந்திரத்தில் டையாக அச்சுச் செய்து தருவார்கள். அதை வாங்கி வந்து நகையாக உருக்குவார்கள். டை கடை, கம்பிக்கடை, செதுக்குப் பட்டறை, மெருகுக்கடை ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்தே ஒரு நகை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆபரணத்திற்கும் ஓரிடம் உண்டு. ஒரே ஆள் எல்லா நகைகளையும் செய்வதில்லை.

கேள்வி: இதற்கான இயந்திரங்கள் எத்தனை பிரிவாக உள்ளன?

பதில் : தொடக்கமாக அச்சு இயந்திரங்கள். அதற்குப் பின் தகடு இழுப்பது, கம்பி இழுப்பது, பாலிஷ் செய்வது, பட்டை செதுக்குவது, எனாமல் செய்வது எனப் பல வகை இயந்திரங்கள் உள்ளன.

கேள்வி : வெளியாட்களின் வருகை இங்குள்ளோரை தொழிலில் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?

பதில் : நிறையப் பாதித்துள்ளது. வெளி மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா, பீகார் மற்றும் அண்டை நாடான பங்களாதேசம் ஆகிய இடங்களிலிருந்து இங்கு வந்து தங்க நகைத் தொழில் செய்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 50 வருமானத்திற்குக்கூட வழியில்லாத நிலையில் இங்கே வந்து மிகக் குறைந்த கூலிக்குப் பணி செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு இத்தனை நாள் கிடைத்துவந்த கூலி மிகவும் பாதித்து விட்டது. இத்தொழிலில் மட்டுமல்ல. கட்டடத் தொழில், தச்சுத் தொழில் எனப் பல தொழில்களிலும் வெளி மாநிலத்தவரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இத்தொழிலில் ஒருவரை நம்பி ஒரு குடும்பம் இருந்த நிலை மாறிவிட்டது. இத்தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டு விட்டது.

கேள்வி : இத்தொழிலில் ஒரு தொழிலாளிக்கும், ஒரு முதலாளிக்கும் என்ன வருமானம் கிடைக்கும்?

பதில் : முன்பு போல் பட்டறை அதிபர்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டு தொழிலாளிக்குக் கூலி தரும் நிலைமை இப்போது இல்லை. இப்போது ஒருவர் நான்கு பேரை வைத்து வேலை செய்தால், அவரும் அவர்களுடன் உட்கார்ந்து வேலை செய்து அவர்களின் கூலியையே பெறுகிறார். அப்படி உட்கார்ந்து வேலை செய்யாத நிலையில் அந்தச் சம்பளம் கூடக் கிடைக்காது.

இப்போது ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 300 மட்டுமே கூலி கொடுக்க முடிகிறது. இது இப்போதைய விலைவாசி ஏற்றத்தில் நகர வாழ்க்கைக்குப் போதாததாகவே இருக்கிறது. இதுவும் கொடுத்துக் கட்டுபடியாவதில்லை. மேலும் வேலை இல்லாத நேரங்களில் இதுவும் கிடைக்காமல், தொழிலாளர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். எனவே இத்தொழில் நலிந்து வருகிறது. கட்டடத் தொழிலாளர்கள், தச்சுத் தொழிலாளர்களெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 600/& வரை ஊதியம் பெறுகிறார்கள். ஆனால், மிகுந்த விலை மதிப்புள்ள தங்கத்தில் நுணுக்கமான வேலைகளைச் செய்யும் நகைத் தொழிலாளர்கள் குறைவான கூலியையே பெறுவது வேதனையானது.

கேள்வி : நகை வடிவமைப்பு என்பது நகைத் தொழிலாளியின் கற்பனையா? அல்லது நகை செய்யக் கொடுப்பவர் தரும் வடிவமைப்பா?

பதில் : இரண்டுமே உள்ளன. வேலை செய்பவர்களும் தங்கள் கற்பனையில் வடிவமைப்பார்கள். வியாபாரிகளும் வடிவமைப்பைச் சொல்லி அதன்படி செய்து தரக் கேட்பார்கள். சில வேளைகளில் நகையை வாங்கும் பொது மக்களும் மாறுதல்கள், திருத்தங்கள், புதிய வடிவங்கள் செய்து தரச் சொல்லிக் கேட்பார்கள். கேட்பதற்கேற்பச் செய்து தருவார்கள். ஏற்கனவே நாங்கள் செய்து தந்த வடிவங்கள் கடைகளில் இருக்கும். அவற்றைப் பார்த்து அவற்றில் ஏதேனும் மாறுதல்கள் சொன்னால் அவ்வாறு மாறுதல்கள் செய்தும் தருவார்கள்.

 

கேள்வி : நகையின் தரம் எப்படிக் கணக்கிடப் படுகிறது?

பதில் : நகையின் தரம் தொடர்பாக முன்பிருந்த சந்தேகங்கள் இப்போது நூற்றுக்கு நூறு இல்லாமல் போய்விட்டன. இப்போதைய நகைத் தொழில் நூற்றுக்கு நூறு உத்தரவாதமானதாக மாறியுள்ளது. இதற்குப் பொது மக்களின் விழிப்புணர்ச்சியும், அரசாங்கத்தின் சட்டமும் காரணங்களாகும்.

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ஹால்மார்க் தரக் கட்டுப்பாட்டின்படி ஒரு குன்றிமணி அளவு கூட கலப்படம் செய்ய முடியாது. 916 தரத்தில் நகைகள் செய்யப்படுகின்றன. BIS (Bureau of Indian Standard) என்னும் தரக் கட்டுப்பாடு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பில் உரிமம் பெற்று, தரச் சான்று கொடுக்கக் கூடிய ஹால் மார்க் மையம் உள்ளது.

செய்யப்படும் ஒவ்வொரு நகையும் அந்த ஹால்மார்க் மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. அங்கே தரம் பரிசோதிக்கப்பட்டு, தரமானதாக இருந்தால் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வைத்துத் தரப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஒரு விழுக்காடு கூட மாற்றுக் குறைவான நகை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

இதில் தங்கநகைத் தொழிலாளிக்குள்ள ஒரு சிக்கலையும் கூற வேண்டியுள்ளது. இந்த 916 தரத்தில் நகைகள் செய்ய சேதாரம் மிக அதிகம். ஆனால் அந்த அளவுக்குச் சேதாரம் கொடுக்கப் படுவதில்லை. இது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலும் நலியக் காரணமாக உள்ளது.

முன்பு, செய்த பொடி கலந்த நகைகளில் சேதாரம் குறைவு. அவற்றைச் செய்வதில் தொழிலாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இப்போது உற்பத்திச் செலவு அதிகம். அதை நகை வியாபாரிகள் கொடுப்பதில்லை. அவர்கள் வியாபாரப் போட்டியைக் காரணம் காட்டித் தர மறுக்கிறார்கள். செய்கூலி, சேதாரம் இல்லை என விளம்பரம் செய்கிறார்கள். அப்படி விளம்பரம் செய்வதே தவறு. அதை மக்களும் நம்புகிறார்கள்.

இப்போது 100 கிராம் தங்கத்தைக் கொடுத்து ஒரு தொழிலாளியிடம் நகை செய்யச் சொன்னால், அதற்கு 8 முதல் 10 கிராம் வரை சேதாரம் கொடுத்தால்தான் கட்டியாக உள்ள தங்கத்தைத் தகடாக, கம்பியாக மாற்றி, பிற உப தொழில்களையும் செய்து முழுமையான நகையாக்கித்தர முடியும். ஆனால், சேதாரம் மிகக் குறைவாகக் கொடுப்பதால் இப்போது லாபமே கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது.

 

கேள்வி : ஒரு நகை எத்தனை நாள்களில் செய்து முடிக்கப்படுகிறது?

பதில் : அது வடிவமைப்பைப் பொறுத்தது. எந்த நகை வேண்டுமோ அதற்கேற்பக் கால அளவு வேறுபாடுகள் இருக்கும்.

கேள்வி : தங்க நகை செய்யப் பொதுமக்கள் உங்களை நேரடியாக அணுகுகிறார்களா?

பதில் : இப்போது அந்த நிலை இல்லை. பொதுமக்கள் நகைக்கடைகளை அணுகுகிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் எங்களுக்குப் பணிகள் கிடைக்கின்றன. பொதுமக்கள் ஒன்று, இரண்டு தருவார்கள். வியாபாரிகள் மொத்தமாகத் தருகிறார்கள்.

கேள்வி : வியாபாரிகள் உங்களிடம் நேரடியாகத் தருகிறார்களா?

பதில் : நேரடியாகத் தருவதைவிட, இடைத் தரகர்கள் மூலம்தான் அதிகம் தருகிறார்கள்.

கேள்வி : ஒரு பட்டறையில் குறைந்த பட்சம்- அதிக பட்சம் எத்தனை பேர் வேலைக்குத் தேவைப் படுவார்கள்?

பதில் : குறைந்தது இரண்டு பேர் அல்லது மூன்று பேர் தேவைப் படுவார்கள். அதிக பட்சமாகப் பத்துப்பேர் அல்லது பதினைந்து பேர் கூடச் சேர்ந்து வேலைகள் செய்வார்கள். அது அவர்களுக்கு வரக்கூடிய வேலைவாய்ப்பைப் பொருத்தது.

கேள்வி : இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் இந்தத் தொழில் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவுகின்றன?

பதில் : இயந்திரங்களின் வருகை தொழிலை விரைவாக முடிப்பதற்கும், அதிகமாகச் செய்வதற்கும் உதவியுள்ளன. ஆனால், பெரிய பஞ்சாலைகள் எப்படிக் கைத்தறித் தொழிலை நலியச் செய்தனவோ, அதேபோல இயந்திரமயமாக்கல் குடிசைத் தொழிலாக இருக்கும் இத்தொழிலை நலியச் செய்யும் என்பதே உண்மை.

இப்போது இத்தொழிலிலும் பெரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இயந்திரமயமான அந்தத் தொழிற்சாலைகளில் குறைந்த கூலியில் வெளிமாநிலப் பணியாளர்களைக் கொண்டு நகைகள் செய்யப் படுகின்றன. அவர்களோடு குடிசைத் தொழிலாளிகளான நாங்கள் போட்டி போட இயலவில்லை.

கேள்வி : உங்கள் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வாரியம் ஏதேனும் அமைத்துள்ளதா? நலத்திட்ட உதவிகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா?

பதில் : அரசு ஒரு நலவாரியம் அமைத்துள்ளது. ஆனால் எந்தச் செயல்பாடும் இதுவரை இல்லை. அதன் பயன்களை இதுவரை யாரும் அனுபவித்ததாகத் தெரியவில்லை. பெயரளவில்தான் அது இருக்கிறது. எங்கள் தொழிலாளர்களுக்கோ, அவர்கள் குடும்பத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கோ எந்த உதவியும் செய்யப்படவில்லை. வீடு, வீட்டுமனை, மருத்துவம், குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் என எதுவும் செய்து தரப்படவில்லை.

கேள்வி : ஒரு நகைப் பட்டறை வைக்கக் குறைந்தது என்ன முதலீடு தேவைப்படும்?

பதில் : சாதாரணமாக 2 அல்லது 3 பேர் பணி செய்யும் பட்டறை தொடங்க இன்றைய நிலையில் இடம், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்குக் குறைந்தது 5 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

கேள்வி : உங்களது தொழிலுக்கு மின் கட்டணம் எப்படி வசூலிக்கப் படுகிறது? பதில் : எங்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்த குடிசைத்தொழில் என்ற அளவில் வீடுகளுக்குப் பயன்படுத்தும் கட்டணமாக வசூலிக்குமாறுதான் அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் மின்சார வாரியம் வர்த்தகப் பிரிவில்தான் வசூலிக்கிறது. மின்வாரியப் பொறியாளரிடம் அரசாங்க ஆணையைக் காட்டிப் பேசியும் அவர்கள் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. நாங்கள் மோட்டார் வைத்துச் செய்யப்படும் வேலைகளுக்குக் கட்டணச் சலுகை கேட்கவில்லை. தொழில் செய்வதற்கு விளக்கெரிப்பதற்குத்தான் கட்டணச் சலுகை கேட்கிறோம்.

கேள்வி : இத்தொழிலுக்குப் பரம்பரைப் பயிற்சியா அல்லது இதற்கெனப் பயிற்சி நிறுவனங்கள் ஏதேனும் உள்ளனவா?

பதில் : முதலில் இது குலத்தொழிலாகத்தான் இருந்தது. இப்போது எல்லோரும் இத்தொழிலைச் செய்கிறார்கள். சில இடங்களில் பயிற்சி நிறுவனங்கள் வைத்துக் கற்பிக்கிறார்கள். அவை மும்பை, சென்னை முதலிய இடங்களில் தனியாரால் நடத்தப்படுகின்றன. ஆனால் அதிக அளவில் இல்லை. பெரும்பாலும் பரம்பரைப் பயிற்சியாகவும், பழக்கத்திலும் இத்தொழில் கற்பிக்கப் படுகிறது.

கேள்வி : தற்போதைய தங்க விலையேற்றம் நகைத் தொழிலைப் பாதித்துள்ளதா?

பதில் : விலையேற்றத்தால் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது இருக்கத்தான் செய்யும்.

கேள்வி : உங்கள் சங்கத்தின் சார்பாக அரசிடம் கோரிக்கைகள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?

பதில் : கிளஸ்டர் அமைப்புக் கேட்டுள்ளோம். அரசாங்கமே பொதுவான தொழிற்பேட்டை ஒன்று அமைத்து அங்கு எல்லா வகை இயந்திரங்களும் நிறுவித் தர வேண்டும். அங்கே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சென்று இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதுவரை அத்தொழிற் பேட்டை அமைத்துத் தரப்படவில்லை.

மாற்றுத் தொழில்கள் செய்ய வங்கிக் கடன் வசதி, குடியிருக்க இலவச வீட்டுமனை அல்லது தொகுப்பு வீடுகள் வேண்டுமென்று கேட்டிருந்தோம். எதுவும் கிடைக்கவில்லை.

கேள்வி : மத்திய, மாநில அரசாங்கங்கள் இத்தொழிலுக்குக் கட்டுப்பாடுகள் ஏதேனும் விதித்துள்ளனவா?

பதில் : 1962 இல் தங்கக் கட்டுப்பாடுச் சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப் பட்டது. அதன்படி தங்க நகை செய்ய மத்திய கலால் வரி அலுவலகத்தில் (சென்ட்ரல் எக்சைஸ்) உரிமம் பெற்றுத்தான் வேலை செய்ய வேண்டும் என இருந்தது. அப்போது வியாபாரிகளும் மத்திய அரசிடம் உரிமம் பெற்றே நகை வியாபாரம் செய்ய வேண்டும். திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தத் தொழிலையும், வியாபாரத்தையும் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றிச் செய்து வருகிறார்கள்.

தங்க நகைகள் மிகவும் விலை உயர்வானவைதான். ஆனால் அவற்றைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை மிகவும் தாழ்வாகவே உள்ளதாக திரு. சி. ரங்கராஜன் அவர்கள் தெரிவிக்கிறார். நகை என்ற சொல்லுக்குச் சிரிப்பு என்றும் பொருள் உண்டு. ஆனால், இந்தப் பொன்நகை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் உதடுகளில் புன்னகை இல்லை. தங்க நகைத் தொழிலாளர்கள் குறைகள் களையப்பட்டால்தான் அவர்கள் உதடுகளில் புன்னகை பூக்கும். நகைத் தொழிலாளர்கள் புன்னகை செய்வது எப்போது?

By jeyanethiyakaljanijewellery

இலங்கையின் ஆதிவாசிகள்.


இலங்கையின் ஆதிவாசிகள்.

Picture


 இலங்கையின் ஆதிவாசிகள்எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர். வெத்தா (சிங்களம்: “වැද්දා”) என்பது வேடன்என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல். எனினும் சிறப்பாக, இலங்கையின் காட்டுப் பகுதிகளில் இன்னமும் சிறு தொகையினராக வசித்துவரும்இனத்தவரைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுகின்றது. தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களே. வெளியார் இவர்களை வேடர் என்னும் பொருள்பட “வெத்தா” எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை “வன்னியலா எத்தோ” (Wanniyala-Aetto) எனவே குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் “காட்டைச் சேர்ந்தவர்கள்” அல்லது “காட்டில் வாழ்பவர்கள்” என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் பேசுகின்றார்கள். இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்களே இயக்கர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர். ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, “எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள” என்று குறிப்பிட்டாராம். இவர்கள் ஆரம்பத்தில் என்ன மொழியைப் பேசினார்கள் என்பது தெரியவில்லை. இன்று இவர்கள் தாங்கள் வாழும் புகுதிகளில் வழங்கும் பெரும்பான்மை மொழிகளான சிங்களம் அல்லது தமிழைப் பேசிவருகிறார்கள். மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள்.
By jeyanethiyakaljanijewellery

மூத்தக் குடி தமிழ்க்குடி!.


மூத்தக் குடி தமிழ்க்குடி!.

Picture


மூத்தக் குடி தமிழ்க்குடி!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” இவை, பழம்பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம். ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிறுவியிருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ ஆய்வு மையத்தினர். உலக அளவில் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்து அங்கீகாரம் தருவதில் ‘நேச்சர்’ என்ற சர்வதேச ஆங்கில விஞ்ஞான இதழ் முதன்மையானது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியைப் பாராட்டி தனது அட்டைப்பட கட்டுரையாக ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டிருப்பது இதுதான் முதன்முறை. இதுவே, இந்த ஆராய்ச்சியின் மகத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கி றது என உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஹைதராபாத் ஆய்வு மையத்தினர். இது நமது தொன்மையின் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள உதவுகிறது என்றால்… இதைவிட இன்னொரு மகிழ்ச்சித் தகவல், இந்த ஆய்வை மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எட்டிய விஞ்ஞானிகள் குழுவில் மிக முக்கியமானவரான கே.தங்கராஜ், ஒரு தமிழர் என்பதுதான். “65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனைப் பற்றிய ஆராய்ச்சியை 14 வருடங்கள் இடைவிடாது நடத்தி முடித்து இந்த முடிவை எட்டி இருக்கிறோம். பொதுவாகவே மனித குழுக்கள்… மொழிக் கூறுகளின் அடிப்படையில் டிராவிடியன், இந்தோ- ஐரோப்பியன், ஆஸ்ட்ரோ–ஏஷியாடிக், திபெத்தோ-பர்மன் என்ற பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். இது தவிர, அந்தமான் மொழியினர், மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளை, சமூக ரீதியிலான குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 மனிதக் குழுக்களை இந்த ஆராய்ச்சிக்காக சாம்பிள் எடுத்துக் கொண்டோம். அதாவது இந்தக் குழுக்களில் இருந்து 132 தனிநபர்கள், அவர்களின் ஒரு லட்சம் டி.என்.ஏ. ஒரு மூலக்கூறு வேறுபாடு (எஸ்.என்.பி.)மாதிரிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினோம். இந்த மனிதக் குழுக்களில் ஓங்கே, கிரேட் அந்தமானிஸ் உட்பட ஆதிவாசி இனக் குழுவினர் மற்றும் நிகோபாரில் வசிக்கும் மனிதக் குழுவினரை ஆராயும்போது, பல வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைத்தன. இதே போன்ற ஆராய்ச்சியை நாம் 2005-ல் செய்தபோது, அது உலகின் முக்கியமான அறிவியல் இதழான ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்தது. அதன் நீட்சிதான் இந்த ஆய்வு.பொதுவாக மனித இனம் இன்றைய ஆப்ரிக்கா கண்டப் பகுதிகளில்தான் முதலில் உருவானது என்பதே இன்றுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆப்ரிக்கக் கண்டத்தில் உருவான மனித இனம், உலகம் முழுவதும் எப்படி நகர்ந்துவந்தது என்பதுதான் முக்கியக் கேள்வி. ஆப்ரிக்காவிலிருந்து கடல்வழியாக நகர்தல், நில வழியாக நகர்தல் ஆகிய இரு வழிகளில்தான் ஆதிமனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு வந்திருக்க முடியும் என இருவேறு கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில்தான் எங்களுடைய ஆராய்ச்சி… அந்தமானிய ஆதிவாசிகள்தான் முதன்முதலில் ஆப்ரிக்காவிலிருந்து சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்குக் கடற்கரை வழியே, வெளியேறிய முதல் மக்கள் குழு என்ற மகத்தான உண்மையை பறைசாற்றியது.
இந்த அந்தமானிய ஆதிவாசிகளுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மற்ற மக்கள் இனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?, இந்திய மண்ணில் மட்டும் வேறு எங்கும் இல்லாத 4,635 மனிதக் குழுக்கள் எப்படி உருவாயிற்று? என்பதை ஆராயத்தான் தற்போது, வெவ்வேறு மனிதக் குழுக்களை பரிசோதனை செய்தோம். பொதுவாகவே நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். உயரம், குள்ளம், பருமன், ஒல்லி இதுபோன்ற வெளியில் தெரியும் மாற்றங்களைப்போல, வெளியே தெரியாத நுண்ணிய மாற்றங்கள் டி.என்.ஏ.-வுக்குள் நடந்து கொண்டே இருக்கும். இதை மரபணு வேற்றுமை (ஜெனிடிக் வேரியேஷன்) என்பார்கள். அந்த வகையில் மனிதக் குழுக்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தியபோது… வட இந்தியர்களும் ஐரோப்பியர்களும் மரபியல் ரீதியாக சுமார் 30-70% வரை ஒத்துப் போனார்கள். ஆனால், தென்னிந்தியர்கள் உலகின் எந்தப் பகுதியில் உள்ள மரபியலோடும் ஒத்திருக்கவில்லை. அதே நேரம்… அந்தமான் பழங்குடி மக்களின் மரபியல் கூறுகள், தென்னிந்திய தொன்மை மக்களின் மரபியல் கூறுகளோடு சில வகையில் ஒத்துப் போகின்றன.ஆக… ஆப்ரிக்காவில் இருந்து அந்தமான் பகுதிக்கு வந்த ஆதிகால மனிதர்கள் முதலில் தென்னிந்தியாவில்தான் குடியேறினார்கள். இதனைத் தொடர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள்) வேறு ஒரு குழுவினர் வட இந்தியாவில் குடியேறியிருக்கலாம். காலப்-போக்கில் தென்னிந்தியாவில் முதலில் குடியேறியவர்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக பிரிந்து வடக்கு நோக்கியும், வட இந்தியாவில் குடியேறியவர்கள் தெற்கு நோக்கியும் நகர்ந்திருக்கக் கூடும். இப்படி உருவான குழுக்கள் ஒரு காலகட்டத்தில் கலந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தமான் பழங்குடியின மக்களின் மரபியல் கூறுகள், உலகின் வேறு எந்தப் பகுதி மனிதக் குழுக்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. ஆக, அவர்கள் 65 ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்தே இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒரு சில வகையில் மட்டும் வேறுபட்டாலும் தென்னிந்திய தொன்மை மக்கள் வேறு யாரோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள்தான் இந்தியத் துணை கண்டப் பகுதியின் மூத்த குடிகள் முதல் குடிகள் என்பதைக் கண்டறிந்தோம்” என்றவரிடம், “சிந்து சமவெளி நாகரிகம்தான் முதல் நாகரிகம் என்ற ஆய்வு முடிவுகளுக்கு இது முரணாகத் தோன்றுகிறதே..?” என நாம் கேட்க… “இது தேவையில்லாத குழப்பம். நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, ப்ரி-ஹிஸ்டாரிக் அதாவது வரலாற்று காலத்துக்கு முந்தையது. நீங்கள் கேட்கும் நாகரிகம் சில ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படுவது. உதாரணத்துக்கு கிராமங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சென்னை மாநகருக்குக் குடியேறி நகர்ப்புற கட்டமைப்பை ஏற்படுத்தவில்லையா? அதுபோல, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பின்னாட்களில் கட்டமைத்திருக்கலாம். மேலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் வெவ்வேறு மனிதக் குழுக்களின் ஜீன்கள், குரோமோசோம்கள் பற்றி நுண்ணிய முடிவுகள் பல கிடைத்துள்ளன. இது பல நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும்” எனச் சொல்லி முடித்தார் ‘தமிழ் மரபு’க்கு மகுடம் சூட்டியிருக்கும் விஞ்ஞானி கே. தங்கராஜ். 

                              ஆதி மனிதன் பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது, எப்படி? 
ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம். எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள். அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது. இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார். அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி. 
                    
ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?         
பொதுவாக மனிதர்கள்தான்வனவிலங்குகளைவேட்டையாடிக் கொன்றார்கள்
என்ற நம்பிக்கை நிலவி வந்தது. 
ஆனால், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்தகுரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் 
கொல்லப்பட்டான் என்பதை நிருபித்துள்ளார் லீ. ருபர்ஜர்  என்றஜோகன்னஸ் பர்க் பல்கலைகழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங்குழந்தை 
எனப்படும் மனித முதாதையரின்தொல்படிவுகள் 1924 
இல்கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்தமனிதன் எவ்வாறு
இறந்திருப்பான் என்ற விவாதம்நடைப்பெற்றது வந்தது.  ஒருபுலியோ, ஈட்டிபேன்ற கூர்மையான பற்களைஉடைய பூனைபோன்ற விலங்கோத்தான்ஆதிமனிதனைக் கொன்றிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் யோசித்து வந்தனர். ஆனால் ஆதிமனிதனை புலிஅடித்து கொல்லவில்லை ஒரு பெரிய   பறவைத்தான் வேட்டையாடிக் கொன்றது என்று புத்தாண்டுகளுக்கு முன்பு லீபெர்ஜர், 
தமதுசகஆராய்ச்சியாளர் ரோன்கிளர்க்குடன் சேர்ந்து நிருபித்தார். ஆதிமனிதனின் புதைப்படிவுகள் கிடைத்தஇடத்தில்இருந்துசிறியகுரங்குகளின் புதைபடிவுகளில்இருந்து அவை பறவையால்தான்
 கொல்லப்பட்டனஎன்பது நிருபிக்கப்பட்டது.  ஆகவே குரங்குபோன்றுஇருந்த ஆதிமனிதனும்பறவையால்தான் கொல்லப்பட்டிருக்கவெண்டும்என்றவாதத்தைஅவர்கள்முன்வைத்தனர். ஆனால்பறவைதாக்கித்தான்ஆதிமனிதன் இறந்தான் என்பதை அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிருபிக்க முடியாமல் இருந்தது. ஜந்து மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் கழுகுகள் ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்து பாட்டும் ஓஹேயோ அரசின் கட்டிரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார்.  கழுகுகள் மேலே இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து தங்களது கூரிய கால் விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ததில் கண்துளைகளுக்கு பின்னால் ஓரே மாதிரியான துளைகளும்,வெட்டுக்களும் தெரிந்தன. இரதப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக் காயம் ஏற்படும் சேதம் தெரிந்தது.ஆகவே ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது. சுகன்யாதரம்-10  
குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால்
பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது என்கிறார்கள். 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கலம் கொண்ட செல் உருவாகியதாகவும், 2 பில்லியன் ஆண்டுக்கு முதல் சிக்கலான செல்லமைப்பைக் கொண்ட செல்( கலம்) உருவாகியது என்றும்,
பின்னர் 1 பில்லியன் ஆண்டிற்கு முன்னர் பல கலங்கள் கொண்ட செல் உருவாகி , பின்னர் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில மிருகங்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முறையே :
இற்றைக்கு 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரபோடாக்களும் 

550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கலான வடிவம் கொண்ட சில மிருகங்களும் 
500 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் மீன்களும், சூரிய ஒளியை கொண்டு சக்தியை தயாரிக்கும் உயிரினங்களும் உருவாகின. 
475 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில தாவர வகைகள் உருவாகின. 
360 மில்லியன் ஆண்டிற்கு முன்னர் அமீபியா போன்ற பிராணிகள்( உதாரணம் தவளை) போன்ற உயிரினம் உருவாகியது
300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஊர்வனவும் 

200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாலூட்டிகளும் 
150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பறவைகளும் 
65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சில வகை டைனசார்களும் 
2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஜீனஸ் ஹோமோ என்ற மனிதரை ஒத்த இனமும் தோன்றியது. 
200 ஆயிரம் வருடத்திற்கு முன்னரே தற்போது காணப்படும் மனிதனை ஒத்த மனிதன் தோன்றினான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் ஜீனஸ் ஹோமோ எனப்படும் இனம் மனிதரைப் போலக் காட்சியளிப்பதாக அதன் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் என்பவற்றை பார்க்கும் போது தெரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ரோலோபோதனிக் என்ற இனமும் உருவாகியது, அதுவும் மனிதர்களைப் போலவே காட்சியளித்தது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதனிடையே பராந்தரோப்ஸ் எனப்படும் மற்றும் ஒரு மனித இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வெவ்வேறு காலப் பகுதியில் உருவாகி இருந்தாலும் சில ஆண்டுகளில் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இறுதியாக மனிதன் தோன்றி இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
குறிப்பாக கென்யா, ஆபிரிக்கா, ஜோர்ஜியா, ஜாவா தீவுகள், சீனா, இந்தியா போன்ற இடங்களிலேயே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான ஜீனோ ஹோமோ இனம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தாடை பெரிதாகவும் மண்டை ஓடு பின்புறம் நீளமாகவும், காணப்படுகிறது. ஆசியக் கண்டத்தில் தோன்றிய இனத்தில் மண்டை ஓடு சிறியதாகவும் உயரம் குறைவானதாகவும், சில குளிர் பிரதேசங்களில் தோன்றிய ஜீனோ ஹோமோக்கள் பொதுவான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. பிற்காலத்தில் இவற்றின் கலவையே தற்போது உள்ள நவீன மனித இனமாகும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நவீன மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அவை பல பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொண்டதையும் ஆய்வாளர்களும் அகழ்வாரய்ச்சி செய்பர்களும் தற்போது நிரூபித்துள்ளனர். ஆதி காலத்தில் உள்ள மனிதனின் கைகள் நீளமாக இருந்ததையும் பின்னர் அது குறுகியதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி இருப்பதால் அதைப் பார்க்க கண்கள் உருவாகியிருக்கின்றன, ஒலி என்று ஒன்று இருப்பதால் அதைக் கேட்க காதுகள் உருவாகியிருக்கின்றன. கைகள் நீளமாக இருக்கவேண்டியது அவசியம் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியின் போது அவை குட்டையாகிவிடுகின்றன என்று, எல்லாவற்றையும் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகள் அதன் தலையில் கட்டி விடுகிறார்கள், ஒருபடி மேலே போய் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்றால் அதற்கு சிலர் இயற்கையையே காரணம் என்று கூறுகிறார்கள், அதாவது சூரிய ஒளி ஒரு பொருள் மீது பட்டுத் தெறித்து அது எமது கண்களை அடைந்து விழித்திரையில் தலைகீழாகத்தான் விம்பமாகத் தோன்றுகிறது, இருப்பினும் அதனை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகள் சரியான, நேரான பக்கமாக காட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சிக்குத் தெரியுமா இல்லை இயற்கை இதை அறியுமா? என்ன ஒரு வேடிக்கையான் விடயம்.
By jeyanethiyakaljanijewellery


மனிதன் தோன்றிய வரலாறு.

Picture


சமயங்களில் மனிதன் தோன்றிய வரலாறு
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று” என்று தொடங்குகிறது மனிதன் உருவாக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லும் கிறிஸ்தவ வேதம்.வெளிச்சத்தில் தொடங்கி, ஜலம், ஆகாயம், தரை, புல் பூண்டு, மரங்கள், பகல் இரவு வித்தியாசம், நட்சத்திரங்கள், பறவைகள், மீன்கள், நாட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள் என்று தொடர்ந்து மனிதனைப் படைத்தார் என்கிறது கிறிஸ்தவ வேதாகமம். கிறித்துவ வேதம் பொதுவாக வேதம் என்ற சொல் 4 வேதங்களை மட்டுமே குறிப்பவை. வேதம் என்பது ‘வித்’ என்கிற அறிதல் என்று பொருள்படும் சமஸ்கிருத சொல்லடியில் பிறந்தது. கிறத்துவ வேதம் என்றோ இஸ்லாமிய வேதம் என்றோ குறிப்பது முரண்பாடான சொல். அதற்கு பகரமாக மறை (மரை அல்ல) என்ற தமிழச் சொல்லே ஏற்புடையது. விரும்பினால் புணிதமறை திருமறை போன்ற சொற்களை பயன்படுத்தலாம். மறை என்பது மறைபொருளாக உள்ள இறைவனின் வாக்கு அல்லது இறை பறறிய அறிவு என்பதால் இந்த சொல்லே சிறப்பானது என்பது என்கருத்து. கிறித்துவ வேதாகாமம் என்கிற சொல்லிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. வேதம் + ஆகமம் இரண்டும் இணைந்ததுதான் வேதாகமம் என்பது. இதனையே சைவ சித்தாந்தம் என்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்கு ‘ஒன்றிலிருந்து வந்தது’ என்பது பொருள் வேதத்திலிருந்து வநததால் அதனை வேதாகாமம் என்கிறார்கள். வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்து மதத்தில் இது மாதிரியான மனிதத் தோற்றம் குறித்த கருத்து இருக்கிறதா என்று பார்த்தால் ரிக் வேதத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.ஐதரேய உபநிஷதத்தின்படி மனிதப் பிறப்பு கீழ்க்கண்டவாறு நிகழ்ந்திருக்கிறது:
ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். இமைக்கின்ற ஏதும் அப்போது இல்லை. (அதாவது கடவுள் அல்லது தேவர்கள் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் இமைப்பவை என்பது இந்து மதக் கோட்பாடு). ‘நான் உலகங்களைப் படைப்பேன்’ என்று அவர் நினைத்தார்.அம்பலோகம், மரீசீ லோகம், மரலோகம், ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார்.அம்பலோகம் (கடவுள் இருக்கும்) சொர்க்க லோகத்துக்கு மேலே உள்ளது. அம்பலோகத்துக்கு சொர்க்கம் ஆதாரமாக உள்ளது.மரீசி லோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளி. மரலோகம் என்பது பூமி. பூமிக்குக் கீழே உள்ளது ஆபலோகம்.உலகங்களைப் படைத்து விட்டேன்; இனி உலகின் காவலர்களைப் படைப்பேன் என்று கடவுள் நினைத்தார். பிறகு தண்ணீரிலிருந்தே திரட்டி பிரம்ம தேவனை உண்டாக்கினார்.
 பிரம்ம தேவனைப் பற்றி கடவுள் சிந்தித்தார்.
பிரம்ம தேவனின் வாய் பிளந்தது. வாயிலிருந்து பேச்சு வெளி வந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வெளி வந்தது.

மூக்கு தோன்றியது. மூக்கு பிளந்தது. மூக்கு துவாரங்களில் இருந்து மூச்சு வந்தது. மூச்சிலிருந்து காற்று தோன்றியது.
கண்கள் தோன்றின. கண்கள் பிளந்தன. அவற்றிலிருந்து பார்வை தோன்றியது. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினான்.
காதுகள் தோன்றின. அவை பிளந்த போது கேட்கும் தன்மை உண்டாயிற்று. அதிலிருந்து திசைகள் தோன்றின.
தோல் உண்டாகியது. தோல் பிளந்து முடிகளும் முடிகளில் இருந்து மூலிகைகளும் செடிகளும் தோன்றின.
இதயம் தோன்றியது இதயம் பிளந்த போது மனமும் மனத்திலிருந்து சந்திரனும் தோன்றின.
தொப்புள் தோன்றியது. பிளந்த தொப்புளில் இருந்து அபானனும் அபானனிலிருந்து மரணமும் தோன்றின.
குறி தோன்றியது. பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்திலிருந்து தண்ணீரும் தோன்றின. படைக்கப்பட்ட இவை யாவும் பெரிய கடலில் விழுந்தார்கள். பிரம்ம தேவன் அவற்றைப் பசி தாகத்துக்கு உள்ளாக்கினார். ‘நாங்கள் தங்கி உணவை உண்பதற்கு எங்களுக்கு ஓர் இடத்தைக் காட்டுங்கள்’ என்று அவர்கள் பிரம்ம தேவனிடம் கேட்டார்கள். பிரம்மதேவன் அவர்களுக்கு ஒரு பசுவைக் கொண்டு வந்தார்.’இது எங்களுக்குப் போதாது’ என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு குதிரையைக் கொண்டு வந்தார். ‘இது எங்களுக்குப் போதாது’ என்று அவர்கள் கூறினார்கள். பிறகு பிரம்ம தேவன் அவர்களுக்காக ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவனைக் கண்டதும் அவர்கள் ‘ஆகா, இவன் சிறப்பாகப் படைக்கப்பட்டவன்’ என்று கூறினார்கள். அவர்களிடம் பிரம்ம தேவன் ‘அவரவர்க்கு உரிய இடங்களில் புகுந்து கொள்ளுங்கள்’ என்றார்.
நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது.
காற்று பிராணனாகி மூக்கில் புகுந்தது.
சூரியன் பார்வையாகிக் கண்களில் புகுந்தது.
திசைகள் கேட்கும் தன்மையாகிக் காதுகளுக்குள் புகுந்தன.
மூலிகைகளும் செடி கொடிகளும் முடிகளாகித் தோலில் புகுந்தன.
சந்திரன் மனமாகி இதயத்தில் புகுந்தது.
மரணம் அபானனாகித் தொப்புளில் புகுந்தது.
தண்ணீர் விந்துவாகிக் குறியினுள் புகுந்தது.

பசியும் தாகமும் பிரம்மதேவனை அணுகி ‘நாங்கள் இருவரும் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தெரிவியுங்கள்’ என்று கேட்டன. அதற்கு பிரம்ம தேவன், “இந்தத் தேவர்களிடம் உங்களுக்கு இருப்பிடம் அளிக்கிறேன். அவர்களின் உணவில் பங்குதாரராகவும் ஆக்குகிறேன்” என்றார். அதனால் எந்த தேவனுக்கு உணவு அளிக்கப்பட்டாலும் பசியும் தாகமும் அதில் பங்கேற்கின்றன.“உலகங்களையும் அதன் காவலர்களையும் படைத்து விட்டேன். இனி அவர்களுக்கு உணவை உண்டாக்குவேன்” என்று கடவுள் நினைத்தார். கடவுள் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தார். தண்ணீரில் இருந்து ஓர் உருவம் தோன்றியது. அது உணவே.கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட ஆரம்பித்தது. மனிதன் தன்னுடைய வாக்கினால்,முகர்வதன் மூலம், பார்வையால், கேட்கும் திறன் மூலம், தொடு உணர்ச்சியால், மனத்தால் எல்லாம் உணவைப்பிடிக்க முயன்று தோற்றான்.அதனால் தான் உணவு என்று சொல்வதாலேயோ,முகர்வதனாலேயோ, தொடுவதானாலேயோ, கேட்பதனாலேயோ, நினைப்பதனாலேயோ திருப்தி அடைய முடிவதில்லை. ஓடுகின்ற உணவைத் தன் அபானன் மூலம் பிடிக்க முடிந்தது மனிதனால். எனவே அபானனே உணவின் மூலம் மனிதனைத் தாங்குகிறது. ஐதரேய உபநிஷதம் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முதல் அத்தியாயத்தில் கடவுள் உலகத்தையும் மனிதனையும் உணவையும் படைத்தது பற்றிக் கூறும் இந்தப் பகுதி இவ்வளவு தான் மொத்தமே. இதில் பெண்ணைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை என்பதோடு உயிரினங்களின் படைப்பு சம்பந்தமான வரிசையும் விவரிப்பும் எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமாக இருக்கிறது.
                          
   வேதங்களில் மனிதன் தோன்றிய வரலாறு 
வேதங்கள் வேறு உபனிஷத் வேறு, வேதங்களில் சொல்லாததை பின்னர் மக்கள் சேர்த்துக்கோண்டு அதை உபநிஷத் ஆக்கிவிட்டார்கள்.உபனிஷத் என்றால் அருகில் இருந்து கேட்பது, பெரும்பாலும் அதை துணை வேதம் என்ற ரீதியில் வைத்துக்கொள்வார்கள். பிரம்மாவின் கனவில் தான் இந்த உலகம் , மனிதர்கள் எல்லாம் தோன்றினார்கள் என்பதும் ஒரு கருத்து, நீங்கள் சொல்வதும் அதனோடு ஒத்துப்போகிறது.பிரம்மா மனசால் நினைத்தாலே அது நிறைவேறிவிடுமாம்.அப்படி மனசால் நினைத்தே பிரம்மாவிற்கு மகன் கூட பிறந்தானாம் அவர் பெயர் சனத் குமாரர் என்கிற சுஜாதர்! பிரம்மாவின் ஒரு நாள் கல்பம் என்பார்கள் அதில் இரவு மட்டும் … நான்கு யுகங்களும் சேர்ந்து எத்தனை வருடமோ அவ்வளவு காலம், அதனால் நான்கு யுகம் முடிந்தால் உலகம் அழிந்து விடும் , அதாவது பிரம்மா கனவு கலைந்ததும் உலகம் அழிந்து விடும் என்பார்கள். கலியுகமே கடைசி யுகம் என்பதால் , கலி முத்திப்போச்சு லோகம் அழிய போகுதுனு சில பெருசுகள் சொல்வதும் அதனால் தான்.கலியுகம் முடிந்ததும் பிரம்மாவின் தூக்கம் கலைந்து எழுந்து விடுவார் அப்போது தானாகவே உலகம் அழிந்து விடும். 652 கல்பம் என்று நினைக்கிறேன் , அது முடிந்தால் இப்போது இருக்கும் பிரம்மாவும் அழிந்து விடுவாராம், பின்னர் அடுத்த பிரம்ம பதவிக்கு ஒருவரை நியமிப்பார்களாம், அப்படி அடுத்த பிரம்மாவாக நியமிக்கப்படுவது யார்னு இப்போவே பூமியில் இருப்பவர்கள் வேதத்தில் சொல்லிட்டாங்களாம், அடுத்த பிரம்மா ஆஞ்சநேயராம்! பிரம்மா உருவாக்கின மனுசனே அடுத்த பிரம்மா யாருனு சொல்லுற அளவுக்கு திறந்த வெளியாக தெய்வங்கள் இருக்கு :-)) வேதங்கள் உபநிஷத்துகள் குறித்து எனக்கு ஆழ்ந்த வாசிப்பில்லை என்றாலும், அவை கடவுள் குறித்து பேசுவது என்பது பிரம்மம் குறித்தவையே. கடவுள் என்பதும் இறைவன் என்பதும் வேறுபாடான தத்துவ உள்ளடக்கங்களைக்  கொண்டவை. உதாரணமாக அல்லா என்கிற அரபிச் சொல்லிற்கு பொருள் இறைவன் என்பதுதான். அதாவது அரபி தாய்மொழியாகக் கொண்ட கிறித்தவனோ யூதனோ அல்லது இந்துவோ அவனது இறைவனை அல்லா என்றே குறிக்க முடியும். அதற்கு இணையான வேறு சொல் உண்டா என்று எனக்கு தெரியவில்லை. அல்லா என்பது பெயர்ச்சொல் அல்ல. அல்லாவை வாணிக்க்கூடிய பல பெயர்கள் உண்டு. அது வேறு. வார்த்தைகளின் உள்ளடக்கங்களில் உள்ள நுட்பமான வித்தியாசத்தை குறிக்கவே இந்த உதாரணம்.
                     வேதம் துவங்கி பின்னாளைய சங்கரரின் அத்வைதம் வரை பிரம்மம் என்கிற ஓரிறைக் கொள்கைதான் பேசப்பட்டுள்ளதாகவே நான் படித்திருக்கிறேன். பிரம்மம் என்பது பிரபஞ்ச விகசிப்பில் இரண்டு நிலைகளைக் கொண்டது. சத்பிரபஞசம் மற்றும் நிஷ்பிரபஞசம் என்பதாக இத்தத்துவ விசாரங்கள் செல்கின்றன. ஆனால் இப்பதிவிலான வர்ணனை நுட்பமான பல சங்கேதங்களைக் கொண்டதாக உள்ளது. மிகவும் ஆர்வமூட்டக்கூடிய வர்ணனை. அவசியம் அந்த உபநிஷத் பகுதிகளை படிக்கத் தூண்டுவதாக உள்ளது. முன்பு ராகுல சாங்கிருத்யானின் இநதிய தத்துவ வரிசை நூல்களில் படித்தது நினைவில் இல்லை. இந்தவகை விளக்கம் உங்கள் மூலம்தான் அறிகிறேன். இந்த வர்ணனை பல முரண்களைக் கொண்டிருந்தாலும் அதன் உவமைகள் அற்புதமானவை. குறிப்பாக புலன்கள் பற்றிய வர்ணனை. நான்கு வேதங்களையும் அலைகள் வெளியீட்டகம் தமிழில் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது. வழக்கம்போல வாங்கி பிரிக்காமல் ஊரில் வைத்திருக்கிறேன். ஒரே ஒரு முரண் மட்டும். ‘நான் உலகங்களைப் படைப்பேன்’ என்று அவர் நினைத்தார்.இதில் நினைவு என்பது முன்பே ஒருவருக்குள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அல்லது ஒருவருக்குள் பிரசன்னமாகியுள்ள மொழியால் மட்டுமே சாத்தியம். மொழியில்லாமல் நினைவும் இல்லை சிந்தனையும் இல்லை. சிந்திப்பது மொழியால்தான் எனும்போது கடவுள் சிந்தித்த மொழி கடவுளுக்கு முன்பானதாக இருக்க வேண்டும். அப்படியெனில் கடவுளுக்கு முன்பு மொழியைத் தோற்றுவித்தவர் யார்? என்கிற கேள்வி வரும். கடவுளையும் மொழி இயக்குவதாக மாறிவிடும். அதனால்தான் சைவசித்தாந்தம் சிவனை நாதவடிவானவன் நாதரூபன் என்கிறது. நாதம் என்பது இசை. இசை என்பது ஒழுங்கப்படுத்தப்பட்ட ஓசை. அதாவது அரூபமான மொழி. அதனால்தான் எல்லா மதங்களும் சில ஓசைகளை உதாரணமாக ஓம் என்கிற பிரணவம்போல மந்திர வடிவஙகளாக வைத்துள்ளன. ஓசைக்கும் உளவியலுக்கும் உள்ள உறவு இதனை விளக்கும். அது மற்றொரு விவாதம். சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் உலகை மாயையிலிருந்தே படைத்தார் என்பது. இந்த மாயை என்பது குவாண்டம் பிஸிக்ஸில் சொல்லப்படும் வெறுமை (emptiness) போன்றது. அல்லது விசைத்துகள் நிறைந்த ஒருவகை புலம் எனலாம். ஏனேனில் நவீன இயற்பியலில் வெறுமை என்கிற empty ஆக உள்ள ஒரு வெளியே இல்லை. ஆக, இந்திய சித்தாந்தங்கள் மற்றும் வேதாந்தங்கள் ஆகியவை படிக்க படிக்க வியப்பூட்டும் மற்றும் மலைப்பூட்டும் ஒரு சிகரப்பயணம்.உங்களது உலகத் தோற்றம் பற்றியவை பயனுள்ள பல புதிய செய்திகளைத் தருகிறது. இந்த உலகத் தோற்றம் பற்றிய வர்ணனை தண்டவாளங்களில் ஒன்றான வேதாந்தத்தை (வைணவ) அடிப்படையாக் கொண்டது. மற்றொன்றான சித்தாந்தத்தை (சைவ) அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாயை என்பதை வேதாந்திகள் விளக்குவதற்கும் சித்தாந்திகள் விளக்குவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. விசை பற்றிய நியூட்டனின் கருத்துக்கும் ஐன்ஸ்டினின் கருத்துக்கும் உள்ள வேறுபாடு போன்றது. சைவசித்தாந்தம் உலகத் தோற்றத்தை மாயை அடிப்படையில் விளக்குவதால் இதனை பொதுவான இந்து இறையயில் பார்வையாக என்பது
                         
  தமிழ் இலக்கியத்தில் மனித தோற்றம். 
உலகில் அகழ்வாய்வுச் சான்று ஒன்று கூட இன்றி அனைத்து வரலாற்றுக் கோட்பாடுகளையும் விடச் செல்வாக்குடன் கேள்வி கேட்பாரின்றி நிற்பது “ஆரிய இனக் கோட்பாடு” ஒன்று தான். அந்தக் கோட்பாட்டைத் தூக்கிக் குப்பையில் வீசினால் தான் உண்மையான குமரிக் கண்ட, தமிழக, இந்திய, ஏன் உலக வரலாறு மட்டுமின்றி மனித வரலாறே வெளிச்சத்துக்கு வரும். பாவாணர் முதல் பல்வேறு தமிழ் ஆய்வர்களும் தமிழ் இலக்கியங்களை விட சமற்கிருத நூல்களிலிருந்து தான் குமரிக் கண்டம் பற்றிக் கூடுதலான செய்திகளைத் தர முடிகிறது. தென் அரைக் கோளத்தில் இருந்த “ரூட்டா” என்ற நிலப்பகுதி கடலினுள் முழுகிய போது அங்கிருந்த மக்கள் சீனத்துக்கும் மேற்கு நோக்கியும் பாரதத்துக்கும் குடிபெயர்ந்தனர் என்று கூறுகிறது இருக்கு வேதம். மச்ச புராணம், வாயு புராணம் ஆகியவை கடற்கோள் பற்றி விரிவாகப் பேசுகின்றன. நாக நாட்டை 700 காவதம் கடல் கொள்ளும் என்பதறிந்த பூருவ தேசத்து அரசன் படகில் மாவும் மரமும் புள்ளும் ஏற்றி குசராத்துக் கரையில் அவந்தி நாட்டில் கரையேறி காயங்கரை ஆற்றை அடைந்தான் என்கிறது “பழம் பிறப்புணர்ந்த காதை” மணிமேகலையில். அவர்கள் சிந்துக் கரையில் பரவி மேற்கு நோக்கிப் பாரசீகத்தையும் கிழக்கு நோக்கிக் கங்கைச் சமவெளியையும் அடைந்தனர். காயங்கரை ஆறு மணலிணுள் மறைந்துபோக கங்கையும் தொழுனை(யமுனை)யும் இணையும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மணலினுள் வந்து கலக்கும் சரசுவதி ஆறு என்று அதனை இன்றும் வழிபடுகின்றனர். சமற்கிருத நூல்களிலிருந்து அபிதான சிந்தமணி, கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி ஆகியவை திரட்டித் தரும் செய்திகளின் படி இமயமலையும் விந்திய மலையும் நில நடுக்கோட்டின் தெற்கிலிருந்து தொடங்கி வடக்கு நோக்கி நீண்டுகிடந்த இரு மலைத் தொடர்கள்; அவற்றுக்கு இடையில் இருந்த நிலம் நடுநாடு (மத்தியப் பிரதேசம்) என்ற செய்திகள் தெரிகின்றன. சீவகசிந்தாமணியில் வருகின்ற சச்சந்தனின் நடுநாடு இதுவாகலாம். இந்தியாவில் இருக்கின்ற மலைகள், ஆறுகளின் பெயர்கள் அனைத்தும் முழுகிப்போன நிலத்திலிருந்த மலைகள், ஆறுகளின் பெயர்களே.
இந்தியாவில் கேரளத்திலும், சேலத்திலும் குமரி மாவட்டத்திலும் பறளியாறுகள் ஓடுகின்றன. நெல்லை மாவட்டத்திலும் குமரி மாவட்டத்திலும் தாமிரபரணியாறுகள் ஓடுகின்றன.
 துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர். மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம். மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன்.காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம். நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறம் 1:13-16)
இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும். மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ? முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும். குமரிக் கண்டத்திலிருந்து முதலில் வெளியேறியவர்கள் தொலைவான இடங்களுக்கே சென்றனர். ஆறுகளின் கரைகளில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றும் மென்காடுகளையே நாடினர். தாம் சென்ற இடங்களில் இரும்பைக் கண்டுபிடித்து கோடரி செய்த பின்னரே அடர்காட்டுப் பகுதிகளை நாடினர். கங்கைச் சமவெளிக்கும் அவ்வாறே. வட இந்தியாவில் அவர்களுக்கு முன்பே குடியிருந்தவர்களோடு போரிட வேண்டியிருந்தது. அந்தப் போரைப் பாடும் முகத்தான் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொண்டனர். பாண்டியர்களின் நிலவு மரபு பாண்டவர்-கவுரவர்களுக்கும் சோழர்களின் கதிரவன் மரபு இராமனுக்கும் கூறப்பட்டுள்ளது. மேற்குக் கடற்கரையில் கோவா வரையுள்ள பகுதி மாவலி நாடு (மகாபலி நாடு) என்று சேரர்க்குரியதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் அடர்காட்டுப் பகுதியாக இருந்தது.எனவே இறுதியாகக் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிவர்கள் தாம் அங்கு குடியேறினர்.பரசுராமன் கோடரி கொண்டு கடலில் வீசி சேரநாட்டை உருவாக்கினான் என்பது இதனைத் தான். சேரர்,அவர்களைத் தெடர்ந்து சோழர், இறுதியில் பாண்டியர் குடியேறியதால் சேர,சோழ,பாண்டியர் என்ற வரிசை முறை வழங்குகிறது.நெல்லை மாவட்டத் தாமிரபரணியாற்றுக்குச் சோழனாறு என்ற பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிடுகிறார்.அதன் கரையில் தான் ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுக் களம் உள்ளது.ஆதித்தன் எனும் கதிரவன் குலத்தினர் சோழர்கள்.அவர்களைத் துரத்திவிட்டுப் பாண்டியன் அமர்ந்தான்.
“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தன்னவன்”.
என்று முல்லைக் கலிப்பாடல் (104 : 1-4) இதனைக் குறிப்பிடுகிறது.
சோழன் இந்திரனுடன் உறவு கொண்டவன். இது சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திரன் அவையில் ஆடல் மகளான ஊர்வசி எனும் மாதவியை இந்திரன் சோழ நாட்டுக்கு நாடுகடத்த அவள் வழிவந்த மாதவி தான் கோவலனின் காதலி என்கிறது சிலம்பு. இந்திரன் வாழ்ந்த நாடு தாய்லாந்து என்கிறார் பாவாணர். இந்தரனின் ஊர்தியாகிய வெள்ளையானை அங்கு தான் உள்ளது. அங்குள்ள ஒரு நகரின் பெயர் சம்பாபதி. புகார் நகரக் காவல் தெய்வமும் சம்பாபதியே – மணிமேகலை. சம்பா என்ற ஒரு வகை நெல்லைத் தாய்லாந்திலிருந்து சோழன் கொண்டு வந்திருக்கலாம். இன்று பள்ளர்கள் என்று அழைக்கப்படும் மருதர்கள் அங்கிருந்து சோழர்களுடன் வந்திருக்கலாம். இந்திரனை மருத்துக்கள் என்பவர்களோடு எப்போதுமே இணைத்துப் பேசுகின்றன மறைகளும் தொன்மங்களும்.இந்திரனிடமிருந்து ஒருவகை நெல்லையும் ஒருவகைக் கரும்பையும் சேரன் பெற்றுவந்தான் என்று கழக இலக்கியம் கூறுகிறது.இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் பகை இருந்ததையும் இந்திரனது மணிமுடியிலிருந்த வளையத்தை உடைத்து அவனது ஆரத்தைப் பிடுங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான் பாண்டியன் என்கிறது சிலம்பு. மறைகளில் வரும் இந்திரனும் வருணனும் பொருளிலக்கணத்தில் மருத, நெய்தல் நிலத் தெய்வங்கள் எனும் போது மறைகளையும் தொல்காப்பியத்தையும் யாத்தவர்கள் தமிழர்களே என்பதும் “ஆரியர்கள்” என்பவர்கள் ஐரோப்பியர் உருவாக்கிய கற்பனை என்பதும்
By jeyanethiyakaljanijewellery

மனிதனின் தோற்றமும் வளர்ச்சியும்.


மனிதனின் தோற்றமும் வளர்ச்சியும்.

Picture


பூமியில் மனிதன் தோற்றம் எப்போது?
சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை உறுப்பினர்கள் இல்லை. எல்லாம் சேர்ந்து ஒரே இனமாகத்தான் இருந்தது. பின்னர் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒவ்வொரு வகை மிருக இனமாக பிரிந்துவிட்டன. அதில் ஒரு பிரிவுதான் மனித இனம்.கொரில்லா, சிம்பன்ஸி, போனோபோ, உராங் உடான் மனிதன் எல்லாம் சேர்ந்து ஒரே குடும்பம்தான். இந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் இன்று இல்லை. அவை எலும்பு பாஸில்களாக உலகமெல்லாம் புதைந்து கிடக்கின்றன”மனிதனுக்கு மிக நெருங்கிய மிருகம் சிம்பன்ஸிதான். இரண்டுக்கும் இடையே 99 விழுக்காடு DNA ஒற்றுமை காணப்படுகிறது.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”மனித ஜினோமில் மொத்தமாக 3 பில்லியன் எழுத்துக்கள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை எழுத்துக்கள் சிம்பன்ஸி ஜினோமிலும் உள்ளன. இரண்டுக்கும் இடையே 15 மில்லியன் எழுத்துகள் மாறியிருக்கின்றன. அதாவது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுத்து பேதங்கள் உள்ளன. மனித ஜினோமை ஈயின் ஜினோமுடன் ஒப்பிட்டால், அளவிலும் எழுத்து பேதங்களிலும் 40 சத வேற்றுமை இருக்கிறது. கடந்த 40,000 ஆண்டுகளில் மனித இனம் சக குரங்கு இனத்தலிருந்து தன்னை மாற்றிக் கொண்டது. ஆயுதம், சடங்குகள், கலை, இலக்கியம், கட்டடம், தொழில்நுட்பம், ஆன்மிகம், கோயில்கள்…. இப்படி எத்தனை எத்தனை விதத்தில் மனிதன் வேறுபட்டிருக்கிறான்.
1. நிமிர்ந்த உடல், இரண்டு கால்களில் நடப்பது, கண்ணிமைக்கும் நேரத்தில் 360 டிகிரி சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக நெட்டுக்குத்தான நிமிர்ந்த உடல். இரண்டே கால்களால் நாலுகால் பாய்ச்சலுக்குச் சமமாக ஓடும் சாமர்த்தியம். நான்கில் இரண்டு விடுதலை பெற்று கைகளாக மாறியதுகூட உடல் நிமிர்ந்ததால்தான்.
2. தட்டையான முகத்தில் கண்களிரண்டும் சமதளத்தில் அமைந்துவிட்டதால் பைனாக்குலர் பார்வை கிடைத்தது. இதனால் நேராக வரும் ஆயுதங்களின் வேகத்தை அறிந்து அதிலிருந்து தப்பமுடிகிறது (இன்று கிரிக்கெட் பந்தை சமாளிப்பதும் இதனால்தான்).
3. கைகளில் கட்டை விரல் மற்ற விரல்களிலிருந்து பிரிந்து நிற்பதால், எல்லா விரல்களின் நுனியையும் தொடு முடிகிறது. இதுவும் ஒரு முக்கியமான மாற்றம். ஊசியைக்கூட சுலபமாக தரையிலிருந்து பொறுக்கி எடுக்க மனிதனைத்தவிர வேறெந்த விலங்காலும் முடியாது. இசைக்கருவி வாசிப்பது முதல், கத்தரிக் கோல் வெட்டுவதுவரை அனைத்துக்கும் பேருதவியாக இருப்பது கட்டைவிரல்தான். ஏகலைவனின் கட்டைவிரலை துரோணர் குருதட்சினையாகக் கேட்டு வாங்கியதன் இரகசியம் இதுதானே.
4. பேச்சு… ஒரு சந்ததியில் பெற்ற வெற்றிக் கனிகளை சந்தததிதோறும் கொண்டு செல்ல உதவியாக இருந்தது பேச்சுத்திறன்தானே. பேச்சினால் மொழியும் இலக்கியமும் அறிவியலும் வளர்ந்தது, பரவியது. மனித உடலிலும், நடத்தையிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின்னணியாக, வெளிப்படையாகத் தெரியாமல், சூட்சுமமாக இருப்பவை ஜீன் மாற்றங்களே. ஜீன்களில் மாற்றம் நிகழாமல் உடல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லை. தற்போது இந்த பூவுல கில் மனிதர்கள் எண்ணற்ற அதிசயங்களையும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர்.  முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர்,  கண்டும் கொண்டிருக்கின்றனர். இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்?  இந்த பூமி எப்போது தோன்றி யது? எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு  ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும்,  இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.  இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிக ளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற் கான விடைகள் இன்னும் சரியாக கணக் கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது.
பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழி யைக் கற்றுக் கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் “கேலக்ஸி” (Galaxy). இந்த “கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி. அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர். பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.  ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.  பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது. வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு  செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள். மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.
                                        டெதிசு கடல்“கோண்ட்வானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரோசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம். இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது”.  இந்தக் கூற்றிலிருந்து பல உண்மைகளைப் பெற முடியும்:
(1) மனிதர்கள் தோன்றி (135-130) = 5 மில்லியன், அதாவது ஐம்பது இலக்கம் ஆண்டுகள் ஆயின என்பது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஆசிரியர் இதே நூலில் மனிதன் தோன்றிய காலமாக ஐந்து இடங்களில் 5 வெவ்வேறு காலங்களைக் கூறுகிறார். அவற்றுள் 17-ஆம் பக்கத்தில் “ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆதிமனிதர் தோன்றிய பின்னர் கண்டங்கள் சில மீற்றர்கள் மட்டுமே நகர்ந்துள்ளன”. (தன்னினைவில்லாதவர் போன்று எழுதும் இவர் போன்றோரது படைப்புகளை ஆகா ஓகோவென்று புகழும் தமிழகத்து மதிப்புரையாளர்களை நினைக்கும்போது இன்றைய கல்வி முறை சிந்தனை என்ற புலனை எவ்வளவு அழிந்து விட்டது என்னும் திடுக்கிட வைக்கும் உண்மை புரிகிறது.)
(2) டெதிசு கடல் மறைந்து 135 மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதற்கும் முன்பு டெதிசு கடலைக் காட்டும் வரைபடத்தை மனிதர்கள் வரைந்துள்ளனர் என்றால் மனிதன் புவிமேல் அதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் அதாவது 14 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிவிட்டான் என்பது புலனாகிறது.
(3) காட் எலியட் என்பவர் லெமூரிய மனித இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிலிருந்து இருபடிகள் முன்னேறிய இனமே ஆரிய இனம் என்று கூறுவதாகவும் திரு.சு.கி. செயகரன் கூறுகிறார். அப்போது டினோசர்கள் லெமூரியாவில் வாழ்ந்தன என்று காட் எலியட் கூறுவதாகக் கூறுகிறார். ஆரிய இனத்தை உயர்த்துவதற்காக உருவானதே லெமூரியாக் கோட்பாடு என்று இதை வைத்து சு.கி.செயகரன் கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. எர்ணசுட்டு எக்கல் என்பார் உருவாக்கியது லெமூரியக் கோட்பாடு. மனிதன் தோன்றி வளர்ந்த நிலம் லெமூரியா என்பதோடு அவரது வேலை முடிந்தது. இதன் மூலம் ஐரோப்பா அல்லாத ஒரு மண்ணில் மனிதன் தோன்றி வளர்ந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதில் “உள்ளுணர்வால் உணர்ந்த செய்திகளை”ப் புகுத்தியவர் இறைநெறி (பிரம்மஞான)க் கழகத்தினர். இந்தியாவினுள் “ஆரிய” வேதங்களின் ஆட்சியை அழிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று பரப்பி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பனர்களிடையில் ஊடுருவத் திட்டமிட்ட அமெரிக்க முயற்சி தான் இறைநெறிக் கழகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு மும்பையில் காலூன்ற முயன்ற அதனை அங்கு எவரும் ஏறெடுத்தும் பார்க்காததால் சென்னையில் காலூன்றிய அதனுள் உலகிலுள்ள “ஆரிய இன” வெறியர்களும் சாதி வெறியர்களும் புகுந்து கொண்டனர். இந்தியாவில் இறைநெறிக் கழகத்திலிருந்து அமெரிக்கப் பிடியை விலக்க அன்னிபெசன்றைக் கருவாக்கிய பிரிட்டனின் தந்திரம் குறிப்பிடத்தக்கது. நமக்கு வேண்டியது டெத்திசுக் கடல் மறைந்த 13.5 கோடி ஆண்டுக்கும் லெமூரியாவில் மனிதர்கள் தோன்றியதாக காட் எலியட் கூறிய 13.5 – 22.5 கோடி ஆண்டுக்கும் தற்செயலாகவோ, ஏதோ ஏற்பட்ட இணைவை எண்ணிப் பார்க்கத் தோன்றுவது தான். இடைப்பிறவரலாக ஒன்றைக் கேட்கிறேன். கடாரம் (சுமத்திரா) மீது படையெடுத்த இராசேந்திரன் பிடித்த நாடுகளில் “இலாமுரிதேசம்” என்ற ஒன்று இருந்ததாக அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. அந்த வட்டாரத்தில் அத்தகைய பெயருள்ள பகுதி எது என்று அப்பகுதிவாழ் தமிழர்கள் கூற முடியுமா? லெமூரியா என்ற பெயர் நாம் பொதுவாகக் கருதுவது போல் லெமூர் எனும் குரங்குகளிலிருந்து வந்ததா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது இதிலிருந்து ஒரு வேளை புலப்படலாம்.
இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் சுமத்ரா (சு+மதுரா) = நன்மதுரை அல்லது மூலமதுரை, போர்னியோ, புரூனெய் (பொருனை) போன்ற பகுதிகள் உள்ளன. இனி தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள், உலக மக்களின் வரலாற்றையும் குழப்புவது மாக்சுமுல்லர் வகுத்துத் தந்த “ஆரிய இன”க் கோட்பாடு. அறிவொளிக் காலம் எனப்படும் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியரின் உலக வலம் அவர்களுக்குப் பல்வேறு மொழிகளை அறிய வைத்தது. அவற்றுள் முதலில் அவர்கள் அறிந்த சமற்கிருத்ததுக்கும் கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்கும் இருந்த சில தொடர்புகளை வைத்து “ஆரியர்” என்ற இனத்தை செருமானியரான மாக்சுமுல்லர் உருவாக்கி அவர்களுக்கு செருமானியரின் உடல் தோற்றத்தையே சொந்தமாகக் காட்டினார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரும் நண்ணில (மத்திய தரை)க் கடல் பகுதி உட்படட 6 பகுதிகளிலிருந்து “திராவிட இனத்தவர்” இந்தியாவில் குடியேறியதாக தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் எழுதினார். இருவருக்கும் அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மாக்சுமுல்லர் தான் எழுதிய Biography of words என்ற நூலில் தான் ஒன்றோடொன்று உறவுடைய மொழிகளைப் பேசும் மக்கள் இருந்ததாகத் தான் சொன்னதாகவும் அதனடிப்படையில் மனித இனங்களைக் கற்பிப்பது “பாவம்” என்றும் கூறி அதை மறுத்தார். அதே போல் 1875 இல் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் பிற்சேர்க்கையாக மனித இனங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களுடன் உடலின் நிறம், முகத்தோற்றம், மயிரமைப்பு முதலியவை வாழும் சூழல், உணவு ஆகியவற்றால் எளிதில் மாற்றமடைந்து விடுவதாகவும் மண்டையோட்டு நீள அகல விகிதம் தான் இன அடையாளமென்றும் அந்த வகையில் திராவிட ஆரிய மக்கள் எனப்படுவோரிடையில் வேறுபாடு இல்லையென்றும் எழுதினார். மாக்சுமுல்லர் கூறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஐரோப்பாவில் செருமனி-பிரிட்டன் ஆதிக்க அரசியலுக்கும் இந்தியாவில் பார்ப்பன-வெள்ளாள ஆதிக்க அரசியலுக்கும் இவை தேவைப்பட்டன. கால்டுவெலாரின் நூலை மொழிபெயர்த்தவர்கள் அவரது பிற்சேர்க்கையைத் திட்டமிட்டு மறைந்துள்ளனர்.
முதலில் மனிதன் தோன்றிய நிலம் குமரிக் கண்டமே. அங்கிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலிருந்த மொழி, நாகரிக வளர்ச்சிகளுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் ஆங்காங்கு தமக்குரிய வளர்ச்சியை அடைந்தோ அல்லது தேங்கியோ நிற்கின்றனர். அதுபோன்றே குமரிக் கண்டத்தில் தோன்றிய மொழியே மேலே கூறிய மாற்றங்களை ஆங்காங்குள்ள மக்களுடன் எய்தி நிற்கிறது. குமரிக் கண்டத்தில் தொழில்நுட்பம், ஆட்சி போன்றவை வளர்ச்சியடைந்த போது உருவான குழுஉக் குறி மொழி பூசகர்கள்-அரசர்கள் கூட்டணியால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு படிப்படியாக வேதமொழியாகவும் சமற்கிருதமாகவும் உருவாகி நிற்கின்றன. உலகில் நாகரிக வளர்ச்சிடைந்த மக்களின் மொழிகளில் அடித்தளத்தில் தமிழின் சாயலையும் மேல் மட்டத்தில் சமற்கிருதத்தின் சாயலையும் காணலாம். ஆங்கிலச் செய்யுளும் தமிழின் உரைநடையும். எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் வைப்பில் இணையானவை. அதுபோலவே தமிழின் செய்யுளும் ஆங்கிலத்தின் உரைநடையும். சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளைப் பொறுத்தவரை அவை சமற்கிருதத்தை விடத் தமிழுக்கு மிக மிக நெருக்கமானவை. உலகமெலாம் எழுத்தறிவற்ற மக்களின் பேச்சுவழக்குகள் தமிழுக்கு மிக நெருக்கமானவை.
By jeyanethiyakaljanijewellery

மனிதன் எங்கே தோன்றினான் ?


மனிதன் தோன்றிய இடம் குமரிக் கண்டமே…

 

3847775

மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே பாவாணரின் கருத்தை புதிய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன!

மனித குலம் முதன் முதலாக ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றியது; அங்கிருந்துதான் உலகமெங்கும் பரவியது என மானிடஇயல் அறிஞர்கள் இதுவரை கூறிவந்தனர்.

 

ஆனால் லெபனான் நாட்டில் டர்-அட்-டலா என்னுமிடத்தில் மனிதர்கள், மனிதக்குரங்குகள் ஆகியவற்றின் புதைஉயிர்த் தடங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த மானிடஇயல் அறிஞர்கள் 390 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

 

மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி ஆகியவை குறித்து மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் முதல் முதலாக வாழ்ந்தது. இங்கு 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் புதைஉயிர்த் தடங்கள் இங்கு கிடைத்துள்ளன. இங்கிருந்துதான் மனித குலம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்க வேண்டும். மனித குலத்தின் இந்த இடப்பெயர்ச்சி சுமார் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்க வேண்டும்.

 

இங்ஙனம் ஆப்பிரிக்காவில் கிடைத்த மனிதர்களின் புதைஉயிர் தடங்களின் அடிப்படையில் 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு மனிதர்கள் தோன்றி உலகெங்கும் பரவியிருக்க வேண்டும் என மானிட இயல் ஆய்வாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது லெபனானில் அதற்கு 360 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. ஆக மனிதன் ஆசியாவிலிருந்துதான் உலகெங்கும் பரவியுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.

 

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட ஊழிக்காலத்தில் இந்துமாக்கடலில் உள்ள பெரிய நிலப்பரப்பு மூழ்கி மறைந்தது. இக்கண்டத்தில் வாழ்ந்து மறைந்த குரங்கினமே மனித இனமாக பின்னர் உருவெடுத்தது என்ற கருத்தை பிரடெரிக் ஏங்கெல்சு கூறியுள்ளார். இது குறித்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதியுள்ள தமிழர் வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

 

”மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையுமான இடமாற்றங்களும் பற்றிய கருதுகோள் : ”மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையை நெடுகிலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்க கூடியபடி) அதனோடு சிலவிடங்களில் இணைந்தும், கிழக்கில் (என்ழ்ற்ட்ங்ழ் ஒய்க்ண்ஹ) அப்பாலை இந்தியாவும் சண்டாத் தீவுகள் வரையும், பரவியிருந்ததென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத் திணையும் பற்றிய பல ஞால நூலுண்மைகள் அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருத்த தென்பதைப் பெரிதும் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாக உரியனவாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமூரியா எனப்பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோமாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறியிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்.

 

”மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்கும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்”. (தமிழர் வரலாறு-முதல்பாகம், தேவநேயப் பாவாணர் (பக்கம்5-6).

 

கடலூள் மூழ்கி மறைந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்த இனம் முதன்முதலாகத் தோன்றி அங்கிருந்து இந்தியா முழுவதும் பரவி சிந்து சமவெளியில் நாகரிகத்தைத் தோற்றுவித்து அதற்குப்பின் மேற்கு நோக்கி அது பரவியுள்ளது என்பதற்கான அடையாளம்தான் லெபனானில் கிடைத்துள்ள புதைஉயிர்த் தடங்கள் ஆகும்.

தேவநேயப் பாவாணர் இக்கருத்தை முதன்முதலாகக் கூறியபோது அதை எள்ளி நகையாடியவர்கள் உண்டு. ஆனால் இப்போது மானிடவியல் ஆய்வாளர்கள் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களின் மூலம் பாவாணரின் கருத்து உண்மைதான் என்பதை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

 

By jeyanethiyakaljanijewellery

நலிவடையும் நகைத் தொழிலாளர்கள்


நகைத் தொழிலை மற்ற தொழிலைப்போல சாதாரணமாகக் கருதிவிட முடியாது.​ அதிக நுட்பமும்,​​ வேலைப்பாடும் மிகுந்த இத் தொழில்,​​ இலங்கை உட்பட பல இடங்களில் பாரம்பரியமிக்க தொழிலாகவும்,​​ கலையின் சிகரமாகவும் கருதப்படுகிறது.​ இலங்கை உட்பட பல இடங்களில்  நகைத் தொழிலில் சுமார் 10 லட்சம் பேர் (சராசரியாக )ஈடுபட்டுள்ளனர்.​ இவர்கள் நகைத் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்து வருபவர்களே.​ கலை சார்ந்தும்,​​ கலாசாரம் சார்ந்தும் இருக்கும் இத் தொழில்,​​ இப்போது அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.

உலக அரங்கில் இந்திய நாட்டு நகைகளுக்கு அதிக மதிப்பும்,​​ நல்ல வரவேற்பும் இருக்கிறது.​ ஆனால்,​​ அதை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு மதிப்பும்,​​ வரவேற்பும் அண்மைக்காலமாகக் குறைந்து வருகிறது.​ நகைத் தொழிலில் பல ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தாலும்,​​ இந்தத் தொழில் ஈடுபடுகிறவர்கள் வறுமையிலேயே இருக்கின்றனர்.

நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வளம்கூட இப்போது இல்லை.​ இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.​ முக்கியமாக,​​ ஆன்-லைன் வர்த்தகமும்,​​ இயந்திரமயமாக்கலும் இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை வறுமைக்கு வேகமாக இழுத்துச் செல்கிறது.

பல சாகசங்களைச் செய்து ஒருவர் தொழிலை நிமிரச் செய்தாலும்,​​ ஒரு காலகட்டத்தில் அவர் பெரும் நஷ்டத்திலும்,​​ கடனிலும் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுவதாக அத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து ​ வருவதால்,​​ சிறுதொழிலாகச் செய்த பலர், வேறு தொழிலுக்குச் செல்கின்றனர்.​ இன்னும் ​ சிலர் வேறுவழியின்றி இத் தொழிலைச் செய்து வருகின்றனர்.​ விலை உயர்வால் சாதாரண மக்களுக்குத் தங்கம் கனவாகி வருவதால்,​​ இவர்களுக்கு சாதாரணமாகக் கிடைக்கும் வேலைகள் குறைந்துள்ளன.​ இதன் காரணமாக முகூர்த்தம்,​​ பண்டிகை காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத் தொழிலில் ஒரு சில பெரிய நகைக் கடைகள் ​ மட்டுமே இருந்தன.​ ஆனால் இன்று அப்படியில்லை.​ தொழில் துறையில் பெரிய அளவில் கால்பதித்திருக்கும் தனியார் நிறுவனங்கள்,​​ நகை தயாரிப்புத் தொழிலிலும் போட்டிபோட்டு இறங்கி வருகின்றன.​ இந் நிறுவனங்களிடம் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் சிறிய அளவில் நகைப் பட்டறை வைத்து,​​ தொழில் செய்து வந்தவர்கள் விழிபிதுங்கிய நிலையில் உள்ளனர்.

இது ஒருவகை நெருக்கடி என்றால்,​​ ஆன்-லைன் வர்த்தகம் மற்றொரு வகை நெருக்கடியைக் கொடுக்கிறது.​ தங்க வர்த்தகம் ஆன்-லைன் வர்த்தகத்தில் சேரும்வரை பண்டிகைக் காலங்கள்,​​ முகூர்த்தங்கள் போன்ற நாள்களில் மட்டுமே தங்கம் விலை உயர்ந்து வந்தது.​ ஆனால்,​​ இப்போது ஆன்-லைன் வர்த்தகத்தால் காலையில் ஒரு விலை,​​ மாலையில் ஒரு விலை என தங்கத்தின் விலை சூதாட்டம் போன்று நிலையில்லாமல் இருக்கிறது.​ பெரிய வியாபாரிகளுக்கு இந்த விலை உயர்வும்,​​ குறைவும் பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில்,​​ நகைத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.

சொந்தமாக நகைப் பட்டறை வைத்து முதலாளியாக இருந்த பலர்,​​ இப்போது பெரிய நகைக் கடைகளில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.​ மேலும்,​​ நகைத் தொழிலாளர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தங்களது தொழிலுக்கு வேறு வழியின்றி விடை கொடுத்து,​​ இன்று கட்டடத் தொழிலாளி,​​ ஹோட்டல் ஊழியர் என வேறு தொழிலுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

இத் தொழிலில் இப்போது இளைய தலைமுறையினர் குறைவான அளவே காணப்படுகின்றனர்.​ இதனால் நகைத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.​ இத் தொழிலின் பெரும் பகுதி,​​ இப்போது பெரிய வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதால்,​​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையும் அந் நிறுவனங்களை மையமாக வைத்தே சுழலத் தொடங்கியுள்ளது.

இதில் சில நகைத் தொழிலாளர்கள் கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தொழில் செய்து,​​ கந்து வட்டியிலேயே தங்களது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இழந்து வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.​ சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அண்மைக்காலமாக அதிகமாக நடைபெறுகின்றன.

நகைத் தொழிலில் இனிமேல் நல்ல எதிர்காலத்துக்கு வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுவதால்,​​ இத் தொழிலுக்கு முன்புபோல இளைய தலைமுறையினர் வருவது இல்லை.

இன்னும் சில ஆண்டுகளில்,​​ இளைய தலைமுறையினரே இத் தொழிலில் ஈடுபடாத சூழ்நிலை ஏற்படலாம்.

பெரிய வணிக நிறுவனங்கள் நகையைத் தயாரிப்பது,​​ விற்பது என முழுமையாக வாணிப நோக்கில் செயல்படுவதால்,​​ நகைத் தொழிலில் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் மறைந்து வருகின்றன.​

இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை காப்பாற்ற,​​ தங்க விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.​ ​ ஏற்கெனவே இருந்த தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பொற்கொல்லர் நலவாரியத்தின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.​ சிறு நகைத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.​ இந் நடவடிக்கைகளை எடுத்தால்,​​ ஓரளவு இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களைப்​ பாது​காக்​க​லாம்.

அறிவியலின் வளர்ச்சியை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தாலும்,​​ நமது கலையையும்,​​ கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.​ நகைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களோடு நின்றுவிடும் எனக் கருதிவிட முடியாது.​ அவர்கள் இன்று பாதிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ அந்தப் பாதிப்பு நாளை மற்ற தொழிலுக்கு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

By jeyanethiyakaljanijewellery